-மட்டக்களப்பிலுள்ள ரணவிருசேவா குடும்பங்களின் (ரணவிரு சேவா- போரினால் பாதிக்கப்பட்ட பாதுகாப்புத் தரப்பு குடும்பங்களின் நலன் பேணும் அமைப்பு) நன்மை கருதி ஒருங்கிணைந்த இடம்பெயர் சேவை செவ்வாய்க்கிழமை 21.03.2023 மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதாக ரணவிரு சேவா மட்டக்களப்பு மாவட்டத் தலைவரான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி. அப்துல் வஹாப் தெரிவித்தார்.
ரணவிரு சேவா குடும்பங்கள் கொழும்புக்குச் சென்று முடிக்க வேண்டிய ஓய்வூதியம், சம்பளப் பிரச்சினைகள், தமது பிள்ளைகளின் புலமைப்பரிசில் பிரச்சினைகள், கல்விக்கான வசதிகள், கடனுதவிகள், நலன்புரி அலுவல்கள், ஏனைய நிருவாகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குஇந்த இடம்பெயர் சேவையின் மூலம் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள வழியேற்பட்டதாக வஹாப் மேலும் தெரிவித்தார்.
ரணவிரு பிரஜைகள் அபிவிருத்தி திட்டம் என்ற தொனிப்பொருளில் இந்த ஒருங்கிணைந்த இடம்பெயர் சேவையில் சகல திணைக்களங்களினதும் அலுவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த அதேவேளை ரணவிருசேவா குடும்பத்தவர்கள் தமது பிரச்சினைகளை தேவைகள் என்பனவற்றை அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.
இந்நிகழ்வைத் துவக்கி வைத்து உரையாற்றிய ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர ((Rtd. Majer General Nandana Senadeera), இ ரணவிரு சேவா அதிகார சபையின் கீழ் ரணவிரு குடும்பங்களின் நலன்புரி அலுவல்களைக்கென்றே பல வகையான நலன்புரிச் செயல6; திட்டங்கள் உள்ளன. அவற்றை இக்குடும்பங்களுக்குத் தெரியப்படுத்தி அதன் நன்மைகளை அவர்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்வதே இவ்வாறான இடம்பெயர் சேவைகள் நடத்தப்படுவதின் நோக்கமாகும். எனவே ரணவிரு குடும்பங்கள் உங்களுக்குப் பொருத்தமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.
இந்த ஒருங்கிணைந்த இடம்பெயர் சேவையின்போது அதன் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜே.எம்.சி.கே.பி. ஏக்கநாயக்க, தலைவரின் செயலாளர் பிரிகேடியர் றொசான் திரிமான்ன, பிரதிப் பணிப்பாளர் துஷார ஜயசிங்ஹ, திட்டமிடல் மற்றும் மீளாய்வு நிகழ்ச்சித் திட்ட அதிகாரி ஷெஹானி சவிந்தி, ரணவிரு சேவா கிழக்கு மாகாண பணிப்பாளர் டபிள்யூ.டி. ஹேமச்சந்திர, மாவட்ட இணைப்பு உத்தியோகத்தர் சமத் லியனகே உட்பட இன்னும் பல பொலிஸ், முப்படை அதிகாரிகள், திணைக்களங்களின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு ரணவிரு சேவா குடும்பங்களின் பிரச்சினைகள் தேவைகளைக் கேட்டறிவதில் ஈடுபட்டிருந்தனர்.
-வ.சக்திவேல்-