முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார்.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவர் கைதாகியுள்ளார்.
வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கு விசாரணையில் சாட்சியமளிக்கும் சாட்சியத்தை அச்சுறுத்திய சம்பவம் மற்றும் விபத்து தொடர்பான விசாரணைக்கு அவர் ஆஜராகாதமை காரணமாகவே மேல் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2011ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி செட்டிகுளம் அருகே முன்னாள் எம்பி ஜே.ஸ்ரீரங்கா பயணித்த பதிவுசெய்யப்படாத வாகனம் சாலையோர மரத்தில் மோதியதில் எம்.பி.யின் மெய்ப்பாதுகாவலராக இருந்த காவல்துறை சார்ஜன்ட் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் சாட்சி மிரட்டல் மற்றும் விபத்து தொடர்பான வழக்கு விசாரணைக்காக. ஆஜராகாததால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் அலவ்வ பிரதேசத்தை சேர்ந்த ஒருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான வாகனத்தை உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் ஓட்டிச் சென்றதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கு விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் படி விபத்து ஏற்படும் போது வாகனத்தை ஜே ஸ்ரீ ரங்கா எம்பி ஓட்டிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது குழுவினர் மதவாச்சி மன்னார் பிரதான வீதியில் மன்னார் நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.