27.5 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இந்தியா

‘என் தூக்கத்தை கெடுத்து விட்டாய்’: பாதிரியாரின் காதல் ரசம் சொட்டும் பாலியல் உரையாடல்கள்!

கடந்த சில நாட்களாகவே பாதிரியார் ஒருவரின் காதல் லீலைகள் என்ற பெயரில் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து வந்தார்.

தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி முதலில் அன்பாக பேசத் தொடங்கி, நெருக்கமாகப் பழக முயன்றதாக காவல்துறை தெரிவித்தது.

மேலும், பாதிரியாருடன் பழகும் பெண்களிடம் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்து, பின் அந்தப் பெண்களை நிர்வாணமாக வீடியோ பதிவு செய்து வைத்துக்கொண்டு அதை வைத்து மிரட்டி பெண்களை பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்வதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் காட்டாத்துறை அருகே பிலாவிளை பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான ஆஸ்டின் ஜியோ பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் அவர் இளம் பெண்களுடன் செய்த ஆபாச பேச்சு, வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்தார்.

இதை அறிந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோக்கும் மாணவன் ஆஸ்டின் ஜியோவுக்கம் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிரியார் பெனிடிக் ஆன்டோ கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஆஸ்டின் ஜியோ தன்னை மிரட்டி பணம் கேட்பதாகவும் நான் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாகவும் புகார் அளித்தார்.

பாதிரியார் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் ஆஸ்டின் ஜினோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஆஸ்டின் ஜினோவின் தாயார் நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டை நேரில் சந்தித்து மனு அளித்ததோடு பாதிரியாருக்கு எதிராக ஏராளமான பெண்களிடம் ஆபாச சாட்டிங் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், தடயங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைச் சமர்ப்பித்தார்.

அவரிடம் எஸ்பி அலுவலகத்தில் ஏடிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்றது. 2 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில், பாதிரியாரின் ஆபாச வீடியோக்கள் வெளியானது எப்படி? என்று போலீசா கேட்டனர். அதற்கு அஜிதா, அந்த வீடியோக்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.

இதனிடையே கடந்த 11ஆம் தேதி காட்டாத்துறை அருகே உள்ள ஆலந்தட்டுவிளையைச் சேர்ந்த பெண் ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ இளம்பெண்களுக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கூறி குமரி மாவட்ட போலீஸ் சூப்புரெண்டை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்ததுடன் பாதிரியார் தொடர்பான ஆபாச வீடியோக்களையும் பதிவுகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் குமரி போலீஸ் சூப்பிரெண்டிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். இந்தப் புகார் அடிப்படையில் பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் நேற்று மாலை 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாலியல் குற்றம் தொடர்பாக இதுவரை ஐந்து பெண்கள் பாதிரியார் பெனடிக் ஆன்டோ மீது ஆன்லைன் மற்றும் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பாதிரியார் பெனடிக் ஆன்டோ மீதான புகார்களின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினார். இதை அறிந்த பாதிரியார் தலைமறைவாகிவிட்டார்.

இதனிடையே, பாதிரியாரின் ஒரு வாட்ஸ்அப் சட்டிங் பதிவுகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளன. அதில், ஒரு பெண்ணிடம், “என் தூக்கத்தை கெடுத்து விட்டாய்… உன்னையே நினைத்து கொண்டு இருந்தேன்” என்று ஆரம்பித்து, காதல் ரசம் சொட்ட சொட்ட மெசேஜ்களை அனுப்பி உள்ளார்.

உடனே எதிர்தரப்பில் சட்டிங் செய்த பெண், “என்கிட்ட மட்டும் தான் இப்படி பேசுவீர்களா?” என்று கேட்க, “யெஸ்.. உன்னிடம் மட்டும் தான்டீ இப்படி பேசுவேன்… பிராமிஸ் என்னை நம்பு’ என்று பாதிரியார் பதிலளித்துள்ளார்.

இப்போதைக்கு 10-க்கும் அதிகமான பெண்களுடன் பாதிரியார் மிக, மிக நெருக்கமாகவும், ஆபாசமாகவும் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடுத்தடுத்து சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர்மீதான புகார்கள் இனியும் அதிகமாகும் என்கிறார்கள்.

அதேசமயம், இதுவரை வெளியாகி உள்ள வீடியோக்கள், வாட்ஸ்அப் மெசேஜ்கள் ஆகியவைகளின் உண்மைத்தன்மையை கண்டறியும் பணியும் துரிதமாக தொடங்கி உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய இராணுவ வீரர்கள் இறப்பு

east tamil

டேட்டிங் செயலியில் அமெரிக்க மாடல் என ஏமாற்றி 700 பெண்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது

Pagetamil

விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்: பரிசோதனை வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு

Pagetamil

‘சார்’ சர்ச்சை: அண்ணா பல்கலை. விசாரணை குறித்து ஆதாரமற்ற தகவல் – காவல் துறை விளக்கம்

Pagetamil

விண்வெளியில் வேளாண்மை செய்யும் ஆய்வில் வெற்றி!

east tamil

Leave a Comment