உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது இலங்கைக்கு அத்தியாவசியமானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், நெருக்கடி ஊடாக பயணிக்கும் போது சட்டத்துறையின் பொறுப்பு என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டுக்கான தேசிய சட்ட சம்மேளனம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
நாட்டின் மகத்தான வரலாற்றில் சுதந்திரமான தேர்தல்கள் அதற்கு உதாரணமாக அமைந்தன. தேர்தல்கள் மூலம் தகைமை வாய்ந்த சட்டரீதியிலான பிரதிநிதித்துவம் மூலம், நேரடியாக முன்னிற்பதற்கான உரிமை மக்களுக்கு கிடைக்கும்.
இதன் காரணமாக உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவது முக்கியமாகும் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1