இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும், இரா.சம்பந்தன் சந்திக்க மறுக்கவில்லையென தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
“இரா.சம்பந்தனை கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் 1 மணி வரை சந்தித்து பல்வேறு விடயங்களை பேசினேன். அதற்கு முதல்நாள் தமிழ் அரசு கட்சியின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசினர்.
எனவே தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இரா.சம்பந்தன் சந்திக்க மறுத்தார் என்ற செய்தியில் உண்மையில்லை.
அதை பேஸ்புக்கில் பதிவிட்டவரும் உடனடியாக அகற்றி விட்டார். எனவே, இது ஒரு விசமத்தனமான செய்தி“ என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1