வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு பணம் மற்றும் பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்க அச்சகர் கங்கானி லியனகே நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
வாக்குச் சீட்டு அச்சடிக்கும் காலப்பகுதியில் பகலில் 35 பொலிஸ் உத்தியோகத்தர்களும் இரவில் 28 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தேவைப்படுவதாக பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.