26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
கிழக்கு

பெண்களுக்கு எதிரான இணையவழி வன்முறையை நிறுத்து!

‘பெண்களுக்கெதிரான இணையவழி வன்முறையை நிறுத்து’ என்ற தொனிப் பொருளில் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் இன்று வாகரை கண்டலடி கடற்கரையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் என்.தனஞ்சயன், மட்டக்களப்பு மாவட்ட மீன் பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ருக்ஷன் சி குரூஸ், வாகரை பிரதேச செயலாளர் க.அருணன் மற்றும் கல்குடா வலயக் பிரதி கல்விப் பணிப்பாளர் ஜெயவதனன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பராம்பரிய கலாச்சார இசையுடன் வரவேற்கப்பட்டனர். இறைவணக்கத்துடன் தீபச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டன.

அருவி பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் மயூரி ஜனன் தமது உரையின் போது- ஜக்கிய நாடுகள் சபையின் இவ்வருட கருப்பொருளாக டிஜிட்டல் ஆல் என்கிறது.ஆண் பெண் சமத்துவம் என்பதை நடைமுறையில் இருக்க வேண்டும் என்ற உலகம் இன்று தொழில் நுட்பத்திலும் கல்வியிலும் சமத்துவம் இருக்க வேண்டும். தொழில் நுட்பம் வளர்ந்து கொண்டு போகும் அளவிற்கு வன்முறையின் வடிவம் மாறி இணைய வழி வன்முறையாக பெண்களுக்கெதிராக விரிவடைந்துள்ளது என்றார்.

நிகழ்வில் தொடர்ந்து அதிதிகள் உரையாற்றினார்கள்.

நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கௌரவிக்கப்பட்டார்.

அவர் தமது உரையில் தெரிவித்ததாவது- ‘சைபர் கிரைம்’ குற்றங்களுக்கெதிரான நடைமுறைகள் மாவட்ட ரீதியில் அவ்வாறான செயற்பாடு இல்லை என்பது குறைவாக உள்ளது. நீதி மன்றத்தை நாடியே நீதி பெறவேண்டியுள்ளது.

பெண்களுக்கெதிரான இணையவழி ஊடக வன்முறைக்கெதிரான விழிப்புணர்வு நிகழ்வாக இதை பார்க்கிறேன். பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளை அவர்கள் இந்த சமூகத்தை உயர்த்திக்கொண்டே இருக்கின்றனர். நாட்டை ஆளுபவர்களாக விமான ஓட்டியாக அரச நிர்வாகத்தில் என பல துறைகளில் பெண்கள் இருக்கின்றார்கள்.இதன்போது தங்கள் நிலையை உயர்த்தும்போது பல சவால்களை எதிர்கொள்கின்றார்கள். இவ்வாறான நிலையில் தொழில் நுட்ப ரீதியில் வளர்ச்சியடைந்துள்ளோம். இதனை எவ்வாறு கையாள்வது எங்களை பாதுகாப்பது என்பது பற்றி பெண்களே உணரவேண்டும் என்றார்.

பின்னர் சமகாலத்தில் மிகத் துரித கதியில் அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான இணையவழி குற்றங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைப்பாடும் இடைவெளிகளும் மற்றும் சிபார்சுகளும் என்ற தலைப்பில் மாவட்டத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட வன்முறை அடங்கிய பரிந்துரை அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

மாணவர்களின் கலை நிகழ்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அணைவரும் ஒன்று கூடி இணைய வழி வன்முறை தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்து, இணைய வழி வன்முறையை நிறுத்து,இணையத்தின் ஊடாக பெண்களை மிரட்டாதே,என்பன போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

கண்டலடி கடற்கரையில் அரம்பிக்கப்பட்ட பேரணியானது சுமார் 5 கிலோமீற்றர் தூரம் வரை சென்று வாகரை பொது மைதானத்தினை சென்றடைந்தது.
அங்கு பென்களுக்கெதிரான வன்முறையை தடுத்தல் தொடர்பான நாடகம்,கவிதை,ஆங்கில பேச்சு,நாட்டுக் கூத்து என்பன நடைபெற்றது.

-க.ருத்திரன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சம்மாந்துறை நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு

east tamil

UPDATE – களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

முறக்கொட்டாஞ்சேனை விபத்து – ஒருவர் பலி

east tamil

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment