25.4 C
Jaffna
January 6, 2025
Pagetamil
உலகம்

13 வயது சிறுவனை வல்லுறவிற்குள்ளாக்கி கர்ப்பமான 31 வயது பெண் சிறை செல்ல மாட்டார்!

13 வயது சிறுவனுடன் கட்டாய உறவு கொண்டு கர்ப்பம் தரித்த 31 வயது பெண் சிறை தண்டனையில் இருந்து தப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் வசித்து வரும் பெண் ஆண்ட்ரியா செர்ரானோ (31). கடந்த 2022ஆம் ஆண்டு 13 வயது சிறுவன் ஒருவனுடன் நட்பாக பழகியுள்ளார். இந்த நட்பு நாளடைவில் தகாத உறவில் சென்று முடிவடைந்தது. அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி அவர் பாலியல் உறவு கொண்டுள்ளார்.

இதனால், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு ஆண்ட்ரியா ஆளானார்.

இதனை தொடர்ந்து, பவுண்டைன் நகர பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாவை கைது செய்தனர். அவர், பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.

எனினும், கர்ப்பிணியாக இருந்த ஆண்ட்ரியா தரப்பு சட்டத்தரணிகள், அவரது கர்ப்பத்தை காரணம் காட்டி, தண்டனை குறைப்பு கோரிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டில் ஆண்ட்ரியா 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர் என்ற அளவில் குற்றச்சாட்டு பதிவாகவும், சிறை தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கான அளவிலான ஒப்பந்தத்திற்கு அரச தரப்புடன் இணங்க ஆண்ட்ரியா சம்மதம் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ஆண்ட்ரியா கடந்த ஆண்டு ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து உள்ளார்.

ஆண்ட்ரியாவும் சிறுவனும் ஆரம்பத்தில் தாய், மகன் பாசத்தை போல பழகியதாகவும், சிறுவன் அம்மா என்றே ஆண்ட்ரியாவை அழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் சிறிது காலம் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் கருத்து தெரிவிக்கையில், ஒரு குழந்தைக்கு 13 வயது குழந்தையாக உள்ள சிறுவன் தந்தையாகி விட்டான்.  அவனது மீதமுள்ள குழந்தை கால பருவம் வீணாகி விட்டது என வேதனை தெரிவித்து உள்ளார். தற்போது சிறுவனுக்கு 14 வயது ஆன நிலையில் அவனது தாயார், எனது மகனின் குழந்தை பருவம் திருடப்பட்டு விட்டது என்றே உணர்கிறேன். தற்போது, அவன் தந்தையாகி விட்டான். அந்த நிலையுடனேயே அவனது மீதமுள்ள வாழ்க்கையும் கழியும். ஒருவேளை ஆண்ட்ரியா ஆணாக இருந்து, என் மகன் சிறுமியாக இருந்திருந்தால், இந்த வழக்கு நிச்சயம் வேறுபட்டு இருக்கும். பெண் என்பதற்காக அவர் மீது இரக்கம் காட்டுகிறார்கள் என கூறியுள்ளார்.

தற்போது ஆண்ட்ரியா மீதான குற்றப்பத்திரிகையின் தீவிரம் குறைக்கப்பட்டு, 4ஆம் நிலை குற்றச்சாட்டுக்களே சுமத்தப்பட்டுள்ளன. அவர் குறிப்பிட்ட காலம் கண்காணிப்பில் வாழுமாறே நீதிமன்றம் உத்தரவிடுமென கூறப்படுகிறது.

இந்த வழக்கில் வருகிற மே மாதம் விசாரணை நடந்து தீர்ப்பு அளிக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகின் மிக வயதான பெண் காலமானார்!

Pagetamil

இறந்த குட்டியின் உடலை சுமந்தபடி சுற்றித்திரியும் திமிங்கிலம்!

Pagetamil

16 முறை விண்வெளியில் புத்தாண்டை கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

east tamil

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி

Pagetamil

Leave a Comment