வீரகட்டிய, அத்தனயால பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும், சிறு குழுவொன்றுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 08 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு கிராம மக்கள் காயமடைந்துள்ளனர்.
நேற்று (06) பிற்பகல் அப்பகுதிக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், வீதியில் சென்ற இரண்டு இளைஞர்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் அவர்களைச் சோதனையிட்டனர்.
இதற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், இளைஞர்களின் உறவினர்கள் அங்கு கூடினர். மேலதிக பொலிசாரும் அங்கு வந்தனர்.
இரு தரப்பிற்குமிடையில் மோதல் ஏற்பட்டது. இதில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் இரண்டு காதுகளிலும் கடி காயம் ஏற்பட்டுள்ளது.
மோதலில் காயமடைந்த 4 பொலிசாரும், 2 பொதுமக்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.