27.1 C
Jaffna
December 29, 2024
Pagetamil
இலங்கை

மீனவர் பிரதிநிதிகள்- அரசியல் பிரதிநிதிகள் சந்திப்பு: இது இரகசியமாம்!

வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மீனவர் பிரதிநிதிகள் இன்று கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.

இந்த கலந்துரையாடல் பற்றி கூற முடியாது, இது இரகசிய விவகாரங்கள் பற்றி பேசப்படப் போகும் கலந்துரையாடல் என மீனவர் பிரதிநிதிகளில் ஒருவரான ந.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். காலை 11 மணிக்கு யாழ் நகரிலுள்ள பிள்ளையார் இன் ஹொட்டலில் இந்த சந்திப்பு நடைபெறும்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடலில் மீன்பிடிக்க அனுமதியளிக்கலாமென ஆலோசிக்கப்பட்டு வரும் விடயம் தொடர்பிலேயே இந்த சந்திப்பு இடம்பெறுமென மற்றொரு மீனவர் சங்க பிரதிநிதி தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

பெரஹரா யானை தாக்கியதில் ஒருவர் காயம்

east tamil

பூநகரி பிரதேசசபைக்கு விருது!

Pagetamil

கிளிநொச்சி மண்ணின் அடையாளம் நா.யோகேந்திரநாதன் காலமானார்

east tamil

போக்குவரத்து விதிமீறல்: 383 சாரதிகள் மீது வழக்கு பதிவு

east tamil

Leave a Comment