லிட்ரோ வீட்டுப்பாவனை எரிவாயு விலையில் மாற்றம் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுப்பாவனை எரிவாயுவின் விலையில் இந்த மாதம் எந்த மாற்றமும் இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
மாதாந்த லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் இன்று இடம்பெறவுள்ளது.
கடந்த மாத திருத்தத்தைத் தொடர்ந்து, சந்தையில் 12.5 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டர் ரூ.4,743க்கு விற்கப்படுகிறது.
5 கிலோ சிலிண்டர் ரூ.1,904க்கும், 2.3 கிலோ சிலிண்டர் தற்போது ரூ.883க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியின் பலனை விலைக் குறைப்பின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு நிறுவனம் எதிர்பார்ப்பதாக லிட்ரோ காஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
ரூபாயின் மதிப்பு வலுவடைவதால் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அடுத்த சில வாரங்களில் குறையும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.