வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மீனவர் பிரதிநிதிகள் இன்று கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் பற்றி கூற முடியாது, இது இரகசிய விவகாரங்கள் பற்றி பேசப்படப் போகும் கலந்துரையாடல் என மீனவர் பிரதிநிதிகளில் ஒருவரான ந.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். காலை 11 மணிக்கு யாழ் நகரிலுள்ள பிள்ளையார் இன் ஹொட்டலில் இந்த சந்திப்பு நடைபெறும்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடலில் மீன்பிடிக்க அனுமதியளிக்கலாமென ஆலோசிக்கப்பட்டு வரும் விடயம் தொடர்பிலேயே இந்த சந்திப்பு இடம்பெறுமென மற்றொரு மீனவர் சங்க பிரதிநிதி தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1