உலக மகளிர் தினத்தையொட்டி, தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ‘அரசியல் மயமாகும் நீதிமன்றங்களும், ஆபத்துக்குள்ளாகும் நீதிபரிபாலன முறையும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு மதுரையில் நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் த.பானுமதி தலைமை வகித்தார்.
இதில் பேசிய உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தந்துள்ளது. இதற்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. இந்தக் கருத்துக்கு உடன்படாதவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம் கிடைத்தவுடன், அதை வெளியிடுவேன் என்றார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1