நுவரகல வனப்பகுதிக்குள் 7 பேருடன் நுழைந்த 34 வயதுடைய நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
உல்லாசப் பயணம் மேற்கொண்ட எட்டு பேர் கொண்ட குழுவொன்று வெள்ளிக்கிழமை காட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இருப்பினும், இரவைக் கழித்த பின்னர், நபர்களில் ஒருவர் காணாமல் போனார்.
பின்னர் காணாமல் போனது குறித்து அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அந்த குழுவினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
மஹாஓயா காவற்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையை அடுத்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 34 வயதுடைய உஹன பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
நீதவான் விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
மஹாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1