26.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 15 கொலை செய்தவர் தப்பிச் சென்றது எப்படி?: திடுக்கிடும் தகவல்கள்!

கிட்டத்தட்ட 15 கொலைகளுடன் தொடர்புடைய ஒப்பந்தக் கொலைகாரன் நாட்டை விட்டு தப்பிச்செல்ல முற்பட்ட போது, குடிவரவு, குடியல்வு துறையினரால் பிடிக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். எனினும், பொலிசாரின் பிடியிலிருந்து அவர் தப்பிச் சென்றார்.

டுபாயில் தலைமறைவாக வாழும் சக்திவாய்ந்த பாதாள உலகக் குற்றவாளிகளின் ஒப்பந்தங்களின்படி, அண்மையில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெற்ற கொலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் களுமினி ரவிதுசங்க டி சில்வா அல்லது புரு முனா ஆவார்.

முகத்தை மறைத்துக் கொண்டு வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த மர்ம நபரை, பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

விசாரணையில் ஈடுபடும் பொலிசாரின் தகவலின்படி, புரு மூனா செய்ததாகக் கூறப்படும் கொலைகளின் எண்ணிக்கை பதினைந்துக்கும் மேல்.

கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரின்  பிடியிலிருந்து அண்மையில் அவரே தப்பிச் சென்றுள்ளார்.

பாதுக்க, வாகா பகுதியைச் சேர்ந்த கே.கே. ரவீந்து வர்ண ரங்க என்ற பெயரில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி தயார் செய்த “N 10119203” என்ற வெளிநாட்டு கடவுச்சீட்டில் டுபாய்க்கு தப்பிச் செல்வதற்காக கடந்த 24ஆம் திகதி மாலை பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு வந்த புரு மூனாவை குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து கட்டுநாயக்க பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவிசாவளை மேல் நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டு “M/U/B 9026/2022″ என்ற இலக்கத்தின் கீழ் அந்த வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருக்கும் நபருக்கு வெளிநாட்டு பயணத்தடையை விதித்திருந்தது.

டிசம்பர் 18, 2022 அன்று ஹன்வெல்லவில் இடம்பெற்ற கொலையையடுத்து, மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் நீதிமன்றில் இருந்து இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளது.

ஹங்வெல்ல குறுக்கு வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் ஹோட்டல் உரிமையாளர் மொஹமட் ஃபர்ஷான் என்பவரே கொல்லப்பட்டிருந்தார். அவர் கடையை மூட தயராகிக் கொண்டிருந்த போது, சிகரெட் வாங்குவதாக கூறி ஹோட்டலுக்குள் நுழைந்த நபரால், ஹோட்டல் உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹோட்டலின் காசாளர் மேசையில் இருந்த  ஃபர்ஷான் சுட்டுக்கொல்லப்படுவது அருகில் இருந்த பாதுகாப்பு கமராவிலும் பதிவானது.

முகத்தை மூடிக் கொண்டு வந்த கொலைகாரன் ரவிதுசங்க டி சில்வா அல்லது புரு முனா என்பவரே என்பதை மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கண்டறிந்தனர்.

புரு மூனா ஒப்பந்தத்தின்படி கொலை செய்ததையும், கொலையின் பின்னணியையும் பொலிசார் கண்டறிந்தனர்.

இதன்படி ஹங்வெல்லவில் போதைப்பொருள் வர்த்தக அதிகாரத்தை கையகப்படுத்த முயற்சித்த பாதாள உலக குழு தலைவனான லலித் கன்னங்கரவினால் ஃபர்ஷானை கொல்வதற்கான ஒப்பந்தம் புரு மூனாவுக்கு வழங்கப்பட்டது.

ஃபர்ஷானின் சகோதரனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஃபர்ஷானை கொல்ல லலித் விரும்பினார்.

லலித் தனது கூட்டாளிகளைப் பயன்படுத்தி ஃபர்ஷானின் சகோதரனை கொலை செய்ய பல முறை முயன்றார். ஆனால் அந்த முயற்சிகள் வெற்றியடையவில்லை. கடைசியில் ஃபர்ஷானின் சகோதரரிடம், லலித்தின் அடியாட்கள் சிலர் சிக்கியதே நடந்தது. அவர்கள் காயமடையும் வரை நையப்புடைக்கப்பட்டிருந்தனர். ஹங்வெல்ல பொலிஸ் சிவில் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராக இருந்தமையால் ஃபர்ஷானுக்கு பொலிஸில் ஓரளவு பலமும் இருந்தது.

ஃபர்ஷானின் சகோதரனுக்கு பாடம் கற்பிக்கவே, ஃபர்ஷானை கொல்ல முடிவு செய்கிறார் லலித்.

புரு முனா கொலைக்கு பொருத்தமானவர் என ரத்கம விதுரவினால்  லலித்திடம் அறிமுகம் செய்யப்பட்டார். விதுரவின் போதைப்பொருள் வலையமைப்பில் லலித்தும் ஒரு வலுவான தொடர்பை கொண்டிருந்தார். இந்த நட்பின் அடிப்படையில், லலித்திற்கு தேவையான ஒப்பந்த கொலைகாரனை, விதுர அறிமுகம் செய்து வைத்தார். அதுவரை, புரு முனாவிற்கான பணச் செலவுகளை விதுரவே கவனித்துக் கொண்டிருந்தார்.

ஜூலை 31, 2022 அன்று, ரத்கம, கம்மதேகொட வீடொன்றிற்குள் புகுந்த நபரால், பல நாள் படகு உரிமையாளரான தேவ நந்தலால் பிரியந்த சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். புரு மூனாவின் பெயரில் பதிவான முதலாவது கொலை இதுதான். இந்த கொலைக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருந்தது. விதுரனின் ஒப்பந்தப்படி இந்தக் கொலையைச் செய்தார்.

அப்போது பொலிசார் தேடத் தொடங்கியதும் புரு மூனா தெற்கிலிருந்து கொழும்புக்குத் தப்பிச் சென்றிருந்தார். புரு முனா நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அபாயமிருந்ததால்,  காலி மேல் நீதிமன்றில் இருந்து அவருக்கு எதிரான பயணத்தடை பெறப்பட்டது.

பலத்த அரசியல் தொடர்புகளைக் கொண்ட பாதாள உலக போதைப்பொருள் தலைவனாகக் கருதப்படும் ரத்கம விதுரவின் ஒப்பந்தப்படி, நந்தலாலைக் கொன்று, துப்பாக்கிச் சூடு நடத்துபவராக பாதாள உலகத்திற்குள் பிரவேசித்த புரு மூனா மீது 2018 இல் நான்கு பேரை வெட்டிக் காயப்படுத்திய குற்றச்சாட்டு மட்டுமே அதுவரையிருந்தது.

புரு மூனா பாடசாலைப் பருவத்திலிருந்தே வன்முறையில் ஈடுபட்டவர். கழுதை முகம் என பொருள்படும் புரு மூனா என்ற சிங்களப் பட்டப்பெயர் பாடசாலை நண்பர்களால் அவருக்கு சூட்டப்பட்டது. அவரது நீளமான முகம் மற்றும் அவரது காது மடல்களின் வடிவத்தின் அடிப்படையில் அந்த பட்டப்பெயர் சூட்டப்பட்டது. தன்னை புரு மூனா என அழைத்த பாடசாலை நண்பனை ஒருமுறை பலமாக தாக்கியுமிருந்தார்.

அவர் 10ம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்தி விட்டார்.

புரு மூனாவின் குடும்பம் பொருளாதார ரீதியாக வலுவாக இல்லை. தந்தை மரங்களை வெட்டி பிழைப்பு நடத்தினார். புரு மூனாவிற்கு ஒரு தம்பியும் ஒரு மூத்த சகோதரியும் மட்டுமே இருந்தனர். சகோதரி அனுராதபுரத்தில் திருமணம் செய்தார். தந்தையின் ஏற்பாட்டில் இந்த திருமணம் நடந்தது. தாயார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது பலத்த மோதலாகி, தாயும் தந்தையும் பிரிந்தனர்.

புரு மூனா, மற்றைய மகனுடன் தாயார் காலியில் வாடகை வீட்டில் குடிபுகுந்தார்.

புரு மூனாவின் சகோதரியின் திருமணமும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. கணவனை விட்டுவிட்டு தாயிடம் வந்தார். பின்னர், தாயாரின் ஏற்பாட்டில் இரண்டாவது திருமணம் நடந்தது.

புரு முனா 2013 இல் கடற்படையின் சிறப்பு கடற்படை படைப்பிரிவில் கடற்படை சிப்பாயாக இணைகிறார். அப்போது அவருக்கு 19 வயது. புரு மூனா சிறு வயதில் உளநலப் பிரச்சினைகளாலும் அவதிப்பட்டு, சிகிச்சை பெற்றிருந்தார்.

கடற்படையில் 05 வருடங்களாக கடமையாற்றி வந்த புரு மூனா, 2018ஆம் ஆண்டு விடுமுறையில் வீடு திரும்பியபோது, அவரது வாழ்க்கைதலைகீழாக மாறியது.

அவர் விடுமுறையில் வீடு வரும் போது, தந்தையின் சுக துக்கங்களை அறிந்து கொள்வதற்காக காலியிலிருந்து ரத்கம கம்மெத்தேகொடவின் வீட்டிற்கு தனது தாய் மற்றும் சகோதரருடன் செல்வது வழக்கம். அப்படியொரு முறை சென்ற போது, விபரீதமான நிலைமை காணப்பட்டது.

கிராம மக்களுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, கிராம மக்கள் சிலர் தோட்டத்திற்குள் புகுந்து புரு மூனாவின் தந்தையை தாக்கியுள்ளனர். பதினைந்து பேர் தன் தந்தையைச் சூழ்ந்து கொண்டு அவரைத் தரையில் வீழ்த்தி அடிப்பதைப் பார்ப்பது புரு மூனாவுக்கு கோபம் வந்தது.

தந்தை மரங்களை வெட்டும் இயந்திர வாளை எடுத்து இயக்கி, தந்தையை தாக்கியவர்களின் உடலில் வெட்டினார். இதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.  புரு மூனாவின் பெயர் போலீஸ் புத்தகங்களில் எழுதப்பட்ட முதலில் எழுதப்பட்ட சம்பவம் இது. அவர் சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது. சிறையில் பல குற்றவாளிகளுடன் புரு மூனாவிற்கு அறிமுகம் ஏற்பட்டது.

புரு முனா பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் கடற்படை சேவைக்கு செல்லவில்லை. நாட்டின் முன்னணி பிஸ்கட் நிறுவனங்களில் ஒன்றின் காலி முகவர் நிறுவனத்தில் பணிபுரியும் இளம் பெண் ஒருவருடன் புரு முனாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. உயர்தரம் வரை கல்வி கற்றிருந்த அந்த பெண், புரு முனாவைப் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டு அவனைக் காதலித்தார். இந்த உறவை அவரது குடும்பத்தினர் எதிர்த்ததால், அவர் வீட்டை விட்டு ஓடிச்சென்று  2020 இல் புரு மூனாவை பதிவுத் திருமணம் செய்தார். அந்த திருமணத்தில் புரு முனாவுக்கு இப்போது ஒரு வயது மற்றும் 11 மாத குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது.

நிரந்தர வேலை இல்லாத புரு மூனா, 2022 ஜூன் 25 அன்று அருகம்பையில் ஹோட்டலில் வேலை கிடைத்ததாக மனைவியிடம் கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு, சரியாக ஒரு மாதம் கழித்து வீடு திரும்புகிறார். அது ஜூன் 25 அன்று.

ஜூலை 31 அன்று மத்தேகொடவில் நந்தலால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், வீட்டை விட்டு கால் நடையாக வெளியேறினார் புரு முனா.

பொலிசார் புரு மூனாவை அ்டையாளம் கண்டு, அவரை தேடத் தொடங்கியதும்,  கொழும்புக்குத் தப்பிச் சென்றார். அதன்பின்னர், புரு மூனா பற்றிய எந்த தகவலும் இல்லை.

மீண்டும் டிசம்பர் 18ஆம் திகதி ஹன்வெல்ல முஸ்லிம் ஹோட்டலில் இடம்பெற்ற கொலையுடன் மீண்டும் புரு மூனாவின் அடையாளம் வெளியில் தெரிந்தது.

இக்கொலை தொடர்பாக விசாரணை நடத்திய மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவினர் ஆறு, ஏழு குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களில் சம்பத் நிரோஷன் என்பவரே இந்த கொலைச் சம்பவத்தை இயக்கியது தெரிய வந்தது. டுபாயில் இருந்து லலித் கொடுத்த அறிவுறுத்தலின்படி கொலையை இயக்கினார். பொலிசாரிடம் சிக்கிய சம்பத் நிரோஷன் அனைத்தையும் கக்கினார்.

இதன் விளைவாக, ஃபர்ஷானின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளி ஒருவர் ஜனவரி 6 ஆம் திகதி ஹன்வெல்ல, தித்தெனிய கிம்புல்பெனய பகுதியில் உள்ள வெறிச்சோடிய வீட்டில் பொலிசாரின் சுற்றிவளையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.  முன்னாள் இராணுவ சிப்பாய் கரவித்த சியா என அழைக்கப்படும் ரசிது சதுரங்க என்ற பாதாள உலக குற்றவாளியே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஃபர்ஷான் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அவர்தான் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், ஃபர்ஷானை சுடச் சென்ற மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரே கொல்லப்பட்டார் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர்தான் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு புரு மூனாவை தேட ஆரம்பிக்கிறது.

அவர் வேலையை முடித்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருந்தார். ஃபர்ஷானின் கொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் செல்போனில் கடவுச்சீட்டின் புகைப்படம் இருந்தது. புரு முனாவின் முகத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டு அது.

அதன்படி, புரு முனா வேறு பெயரில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல தயாராகி வருவதை மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர், அவிசாவளை மேல் நீதிமன்றில் புரு மூனாவிற்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடையை பெற்றனர்.

அந்த போலிக் கடவுச்சீட்டு டிசம்பர் 11ஆம் திகதி தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

டுபாயில் உள்ள லலித், இத்தாலியில் உள்ள விதுர ஆகியோர் புரு முனாவை டுபாய்க்கு அழைத்துச் செல்ல விரும்பினர். டுபாய்க்கு செல்வதற்கு முன்னர் புரு முனாவிடம் இருந்து அதிகபட்ச வேலையைப் பெற விரும்பினர்.

அதன்படி கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி இராஜகிரிய – புட்கமுவ வீதியில் பழைய இரும்புகள் கொள்வனவு செய்யும் இடமொன்றின் உரிமையாளர் மீது புரு மூனாவின் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அன்று புரு முனாவின் இலக்கு தவறியது. தவறுதலாக அதன் ஊழியர் ஒருவரைத் தாக்கியது.

புரு முனா அந்த ஒப்பந்தத்தையும் டுபாயில் இருந்து பெறுகிறார்.

இந்தியாவில் சிறையிலிருந்த வெலே சுரங்கவின் அடியாள் ஒருவரை கடுவலையில் கடையொன்றில் இருந்து கடத்திச் சென்று வாயில் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சித்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சுரங்கவின் அடியாளை கடையில் இருந்து கடத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கோசல என்ற பாதாள உலக குற்றவாளி. அவரது உறவினரே பழைய இரும்பு சேகரிக்கும் முதலாளி. உறவினரை கொன்று, கோசலவை மிரட்டுவதற்காக அந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இது தவிர, புரு முனாவின் பெயர் பல மர்ம கொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளுடன் தொடர்புடையது. டுபாயில் உள்ள ஒவ்வொரு பாதாள உலகக் குற்றவாளியும் இந்த குறுகிய காலத்தில் புரு மூனாவிடம் நிறைய வேலைகளை கொடுத்திருக்கிறார்கள். புரு மூனாவை பயன்படுத்தி முடிந்தவரை கொலைகளை செய்து, பின்னர் டுபாய்க்கு அழைத்து வருவதே அந்த கும்பலின் திட்டம்.

அதன்படி கடந்த 24ஆம் திகதி டுபாய் செல்வதற்காக விமான நிலையம் வந்தார். அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டில் உள்ள தகவலின்படி, ஏற்கனவே நீதிமன்றத்தால் பயணத்தடை விதிக்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியாது.

அன்று புரு மூனா மில்லனிய பகுதியில் இருந்து வாகனத்தில் விமான நிலையத்திற்கு வந்தார். ஒரு இளம் ஜோடி அவரை வாடகை வாகனத்தில் அழைத்து வந்தனர். புரு மூனாவை விமான நிலையத்தில் இறக்கி விட்டு, அந்த ஜோடி மீண்டும் மில்லனியவிற்கு புறப்பட்டனர்.

அவர்கள் வெகுதூரம் செல்லவில்லை. புரு முனா விமான நிலையத்தில் பிடிபட்டதாக டுபாயிலிருந்து லலித் செய்தி அனுப்பினார். உடனடியாக ஒளிந்து கொள்ளுமாறும் அந்த ஜோடியிடம் கூறினார். அதன்படி தாங்கள் வந்த அதே வாடகை வண்டியில் மில்லனியாவுக்குச் சென்று பலந்துடவில் உள்ள தமது வீட்டில் இருந்து சில ஆடைகளை எடுத்துக்கொண்டு ஹன்வெல்ல நோக்கி சென்று தலைமறைவாகினர்.

விமான நிலைய உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்ட புரு மூனா விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது மாலை சுமார் 6.30 மணி.

விமான நிலைய வளாகத்தில் சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்டதும், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, தடுப்பு அறையில் அடைத்து, மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவிற்கு அறிவிக்க வேண்டியதே பொலிசாரின் கடமை. ஆனால், புரு மூனா அப்படி கைதாகவில்லை. அன்று விமான நிலையப் பொலிஸாருக்குப் பொறுப்பான அதிகாரியாக கடமையாற்றிய சார்ஜன்ட் சேனாரத்ன, புரு மூனாவை கூண்டில் அடைக்காமல், கைவிலங்கு இடாமல் வினோதமான விளையாட்டை விளையாடினார். அவருக்குக் கிடைத்த பெருந்தொகைப் பணமா அல்லது உயர் அதிகாரியின் விருப்பத்தினாலா இவ்வாறு செய்தார் என்பது இன்னும் தீராத மர்மமாக உள்ளது.

இவை அனைத்தும் இடம்பெற்ற போது பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் ஜனக சேனாதிரவும் பொலிஸ் நிலையத்தில் இருந்துள்ளார். சார்ஜன்ட் சேனாரத்ன புரு முனாவுடன் இரண்டு சிகரெட்டுகளை புகைத்துள்ளார். புரு மூனா பொலிசார் பயன்படுத்தும்  கழிப்பறையையும் பயன்படுத்தினர். அவருக்கு விலையுயர்ந்த உணவும் கிடைத்துள்ளது.

இதற்கிடையில் புரு மூனா பொலிஸ் காவலில் இருப்பதாக டுபாய்க்கு ஒரு செய்தியை கூட அனுப்பினார். இதையடுத்து, லலித் டுபாயில் இருந்து புரு முனாவை மீட்கும் நடவடிக்கையை தொடங்கினார்.

ஹெட்டிபொல ரிட்டதெனிய ஸ்ரீ ஜெயலங்காராம விகாராதிபதி பொத்தேவெல இந்திரசார தேரர், திபுல்வாயே திபானந்த தேரர் மற்றும் 11 வயதான இளைய பிக்கு ஒருவர் வாடகைக்கு பெற்ற NW KC – 6523 என்ற சிவப்பு நிற ஆல்டோ வகை காரில் விமான நிலையத்திற்கு வந்தனர்.

இந்திரசார தேரருக்கும் லலித்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருவரின் நட்பு நீடிக்கிறது. அதற்குக் காரணம் இருவரும் ஹொரணையில் கல்வி கற்றவர்கள். இருவரும் துறவற வாழ்க்கையை ஒன்றாக ஆரம்பித்து, கல்வி கற்றனர். அதில் லலித் பாதியிலேயே வெளியேறி, இன்று பலம் பொருந்திய போதைப்பொருள் வியாபாரியாக மாறியுள்ளார்.

லலித்தின் குற்றங்களிற்கு இந்திரசார தேரர் உறுதுணையாக இருந்தார். இல்லாவிட்டால், லலித்தின் தொலைபேசி அழைப்பின்படி, விகாரையில் தங்கியிருந்த ஏனைய பிக்குகளும்  இரவு நேரத்தில் விமான நிலையத்திற்கு வந்திருக்க மாட்டார்.

“எனது பையன் ஒருவன் விமான நிலைய போலீசாரிடம் சிக்கினான். போய் விவரம் சொல்லு” என லலித் கூறியதால், விமான நிலையம் வந்ததாக தேரர் தெரிவித்துள்ளார்.

இந்திரசார மற்றும் அவரது குழுவினர் ஹெட்டிபொலவில் இருந்து புறப்பட்ட இரவு 9.30 மணியளவில் விமான நிலைய பொலிஸாரிடம் வந்தனர். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்தித்து பேசினர். ஒன்றரை மணி நேரம் கழித்து பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறினர்.

இதேவேளை, தற்போதைய நிலைமை குறித்து லலித்துக்கு பல செய்திகள் அனுப்பப்பட்டன.

இந்த பிக்குகள் விமான நிலைய பொலிசாருக்கு ஏதேனும் சன்மானம் கொண்டு வந்தார்களா  என்பது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்தது.

பிக்குகள் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே புரு முனா பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. புரு முனா தப்பிச் சென்று காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்ட மஞ்சள் அக்வா வகை காரில் ஏறுகிறார்.

அவரை ஏற்றியவாறு கார் கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியை நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கு அப்பால், எதையும் கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

இறுதியில், புரு முனா தப்பிச் செல்வதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்தியதன் காரணமாக, விமான நிலையப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜானக சேனாதிரத், சார்ஜன்ட் டபிள்யூ. ஆர். சேனாரத்ன, கான்ஸ்டபிள்களான ரத்நாயக்க மற்றும் பிரசாத் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சார்ஜன்ட் சேனாரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விமானத்திற்குள் உயிரிழந்த இலங்கை பெண்

east tamil

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி

east tamil

கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தியில் பின்னடைவு – சிவஞானம் சிறீதரன்

east tamil

பதுளைக்கு விஷேட ரயில் சேவை

east tamil

அஸ்வெசும நலன்களுக்கு நிலுவைத் தொகை இன்று முதல் வங்கி கணக்குகளில்!

east tamil

Leave a Comment