25.3 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களின் நிலைமை தொடர்ந்தும் இழுபறி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 3000க்கும் மேற்பட்ட அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தொர்ந்து நிச்சயமற்ற நிலைமை நீடிக்கிறது.

தேர்தல் சட்டத்திற்கு அமைவாக, எதிர்வரும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக 3000 இற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள், சம்பளமில்லாத விடுப்பு எடுத்துள்ளனர்.

மார்ச் 9 ஆம் திகதி திட்டமிட்டபடி தேர்தலை தேர்தல் ஆணைக்குழு இனி நடத்த முடியாது என்பதால், இந்த வேட்பாளர்களில் பலர் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் தேர்தல் செயல்முறை நடந்து கொண்டிருப்பதால் அவர்கள் வேலைக்குத் திரும்புவது தடைசெய்யப்பட்டுள்ளது.

மார்ச் 9 ஆம் திகதி திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாத நிலையிருந்தாலும், தேர்தல் நடைமுறைகள் நிறுத்தப்படவில்லை என்பதால் தேர்தல் ஆணைக்குழு இந்த வேட்பாளர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவ தெரிவித்தார்.

தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தால், இந்த ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கான அமைச்சரவை முன்மொழிவை சமர்ப்பிக்க பொது நிர்வாக அமைச்சுக்கு ஆணைக்குழு பரிந்துரைக்கலாம். ஆனால் நீதிமன்றம் அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பதுன், தேர்தலை தொடர தேர்தல் ஆணைக்குழுவை கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, ஆணைக்குழு அத்தகைய பரிந்துரையை வழங்க முடியாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

பொது நிர்வாக அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தலில் போட்டியிடும் எந்த அரச ஊழியர்களும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதாகவோ அல்லது முடிவடைந்ததாகவோ தேர்தல் ஆணைகடகுழுவழடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் பெறும் வரை பணிக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சினால் சட்டப்பூர்வமாக ஏற்க முடியாது. “தேர்தல் செயல்முறை நடந்து கொண்டிருப்பதால், யாராலும் எதுவும் செய்ய முடியாது,” என்று அதிகாரி கூறினார்.

மார்ச் 9ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாமல் போனது, ஒவ்வொரு வாக்காளருக்கும் செலவு செய்ய வேட்பாளர்களுக்கு விதித்துள்ள உச்சவரம்பு தொடர்பாகவும் ஆணைக்குழுவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

49 நாள் பிரச்சார காலத்தில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக செலவழிக்கக்கூடிய தொகையை தேர்தல் ஆணைக்குழு முன்பே கணக்கிட்டிருந்தது.

தேர்தல் ஆணைக்குழு இப்போது புதிய தேர்தல் திகதியை அறிவிக்க உள்ளதால், பிரச்சார காலமும் நீட்டிக்கப்படும் என்பதால், செலவு வரம்பை உயர்த்தும்படி வேட்பாளர்கள் கேட்பார்கள் என்று தேர்தல் ஆணைக்குழு வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தேர்தல்களுக்கான நிதியை எப்போது வெளியிடலாம் மற்றும் தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகளை எப்போது முடிக்க முடியும் என்பதை தேர்தல் ஆணைக்குழு அடுத்த வாரம் நிதி அமைச்சக அதிகாரிகளையும், அரசு அச்சக அதிகாரிகளையும் சந்திக்கும்.

புஞ்சிஹேவ கூறுகையில், இந்த அரசு நிறுவனங்கள் தங்கள் நிலைப்பாட்டை தேர்தல் ஆணைக்குழுவிடம் விளக்கியவுடன், தேர்தல்களுக்கான புதிய திகதியை ஆணைக்குழு அறிவிக்கும்.

தேர்தலுக்கான புதிய திகதியை மார்ச் 9ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

east tamil

மதுபோதையில் டிப்பர் செலுத்தியவரால் கொடூரம்: கிளிநொச்சியில் 2 வயது சிறுமி பலி!

Pagetamil

ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய அட்டை

Pagetamil

ஒரு கிலோ கோழி இறைச்சி இலஞ்சம் வாங்கியவர்கள் கைது!

Pagetamil

பரந்தனில் பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி

east tamil

Leave a Comment