கடந்த 4ஆம் திகதி, கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக, தாயொருவர் தனது ஒன்றரை வயதுக் குழந்தையை இறால் தொட்டிக்குள் வீசியதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
உடப்பு, கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவியே பெண் குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
குறித்த பெண் குழந்தையை இறால் தொட்டிக்கு அருகில் கொண்டு வந்து இறால் தொட்டிக்குள் தள்ளியது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இறால் தொட்டிக்குள் தள்ளிவிட்டு குழந்தையை காணவில்லை என கூறி தேடிய போது, அதே இறால் பண்ணையில் பணிபுரியும் மற்றொரு தொழிலாளி, குழந்தை இறால் தொட்டியில் போராடுவதை பார்த்து அதில் குதித்து காப்பாற்றியதாக கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1