யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பிற்கு பொலிஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுனரால் நியமிக்கப்பட்ட யாழ் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட்டின் பதவியில் நீடிப்பாரா இல்லையா என்பதை தீர்மானிக்கும் வரவு செலவு திட்டம் இன்று மாநகரசபையில் வாக்கெடுப்பிற்கு விடப்படுகிறது.
இன்றைய அமர்விற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு மாநகரசபையால் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்தை எப்படியேனும் வெற்றியடைய வைத்து விட வேண்டுமென செயற்படும் முதல்வர் தரப்பு, அதற்கு வசதியாக எதிரணி உறுப்பினர் ஒருவரிற்கு ஒரு மாத தடைவிதித்தனர்.
எனினும், இன்றைய வாக்கெடுப்பில் தான் கலந்து கொள்வேன் என அந்த உறுப்பினர் அறிவித்துள்ளார். அவர் கலந்து கொண்டால் ஆனோல்ட்டின் வரவு செலவு திட்டம் தோல்வியடைவது மேலும் உறுதியாகும்.
இந்த நிலையில், சபை அமர்விற்கு பொலிஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட உறுப்பினரை உள்நுழைய விடாமல் தடுப்பதற்காகவே பொலிஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.