கண்டி டி.ஐ.ஜி.யின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியென குறிப்பிட்டு, கந்தேநுவர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு தனது நண்பருடன் சென்று மதுபானம் இலவசமாக வழங்குமாறு கோரி உரிமையாளரை மிரட்டிய கடுவெல பொலிஸ் கான்ஸ்டபிள் ஞாயிற்றுக்கிழமை கந்தேநுவர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். .
இந்த கான்ஸ்டபிள் தனது நண்பருடன் உணவகத்திற்குச் சென்று முதலில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்தவர் என அறிமுகம் செய்துள்ளார்.
உணவக ஊழியர்கள் நிலைமை குறித்து ஹோட்டலின் உரிமையாளரிடம் தெரிவித்ததை அடுத்து, இவ்விடயம் தொடர்பில் விசாரிக்க அவர் அங்கு வந்ததாகவும், அவர்கள் கண்டி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவர் எனவும் கான்ஸ்டபிள் தெரிவித்திருந்தார்.
அப்போது அந்த உணவகத்திற்கு எதிராக டிஐஜிக்கு நான்கு மனுக்கள் வந்துள்ளதாக அந்த கான்ஸ்டபிள் உணவக உரிமையாளரிடம் கூறியிருந்தார்.
கூறப்படும் மனுக்கள் தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்காகவே தாங்கள் வந்ததாகக் கூறி கான்ஸ்டபிளும் மற்றவரும் ஹோட்டல் உரிமையாளரை பயமுறுத்தியுள்ளனர். அவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த உணவக உரிமையாளர் சம்பவம் தொடர்பில் கந்தேநுவர பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டபோது அவர்கள் கண்டி பிரதி பொலிஸ் மா அதிபரின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்ல எனத் தெரியவந்துள்ளது.
கந்தேநுவர பிரதேசத்தில் வசிக்கும் இந்த இருவரும் உணவகத்தின் உரிமையாளருக்கு பயத்தை ஏற்படுத்திய பின்னர் இலவசமாக மது அருந்துவதற்காக வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறையில் தனது நண்பருடன் உணவகத்திற்கு வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.