ஐவர் கொண்ட தேசிய எல்லை நிர்ணய குழுவினால் தொகுக்கப்பட்ட இடைக்கால அறிக்கை இன்று (28) பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான வட்டாரங்களை நிர்ணயம் செய்வதற்கான தேசிய எல்லை நிர்ணய குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மட்டத்திலும் பல்வேறு தரப்பினராலும் ஆணைக்குழுவினால் பெறப்பட்ட முன்மொழிவுகள் மதிப்பீடு செய்யப்பட்டு மாவட்ட மட்டத்தில் எல்லை நிர்ணயம் தற்போது வரையப்பட்டு வருவதாக தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை மார்ச் 31 ஆம் திகதிக்குள் ஒப்படைக்க எதிர்பார்க்கிறது.
இந்தக் குழுவில் ஜயலத் ஆர்.வி.திஸாநாயக்க, டபிள்யூ.எம்.எம்.ஆர்.அதிகாரி, கே.தவலிங்கம் மற்றும் ஐ.ஏ.ஹமீட் ஆகியோர் உள்ளனர்.
உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரதமர் தினேஷ் குணவர்தன தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார்.