மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டம் தியோரி கிராமத்தைச் சேர்ந்த மோகனியா (65) என்ற மூதாட்டி, அதே பகுதியைச் சேர்ந்த 75 வயதான பகவான்தின் என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி கடந்த வியாழக்கிழமை இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தை மாநில பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ராம்கேலாவான் பட்டேல் முன்னின்று நடத்தி வைத்தார். அப்போது, அரசு ஏழைகள் திருமண திட்டத்தின் கீழ் அவர்களுக்கு ரூ.11 ஆயிரம் பரிசுப் பணத்தையும், ரூ34 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைப் பொருட்களையும் அவர் வழங்கினார்.
மாற்றுத்திறனாளியான பகவான்தின் 50 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்திருந்தார். அவரது மனைவி 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதேநேரத்தில் மணமகள் மோகனியாவுக்கு இது முதல் திருமணமாகும். கடந்த சில ஆண்டுகளாக லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் முறையில் இருவரும் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.