26.3 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

பதவியை தக்கவைக்கவே ரணில் திட்டமிடுகிறார்!

கட்சி மற்றும் பதவிகளை தக்க வைப்பது தொடர்பிலே பல வியூகங்களை ரணில் விக்ரமசிங்க வகுக்கிறார் எனத் இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து, ஜனநாயக ஆட்சி முறையை இல்லாது செய்வதிலும், ஜனநாயகம் என்பதற்கு பல விளங்கங்களை சொல்லியும் போராட்டங்களை முன்னெடுத்த இன்றைய நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்களே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது ஓர் துர்ப்பாக்கியம். துரதிஸ்டவசமானது.

அவரை ஒரு லிபரல்வாதி என்றுதான் பலர் வெளி உலகிலே சொல்லுவார்கள். அந்த லிபரல் தன்மை கொண்டவர், இன்று ஜனநாயகத்தை மதிக்காத அல்லது ஜனநாயக முறைகளை ஏற்றுக் கொள்ளாதவராக அவர் இந்த நாட்டிலே காணப்படுகிறார்.

அவருடை காலத்தில் பெரிய அநியாயங்கள் நடைபெறுவதற்கான கட்டியம்தான் இந்த தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு, தேர்தல் நிறுத்தப்படுவதற்கு அல்லது பின்னுக்கு கொண்டு செல்வதற்கு காரணமாக அமைகின்றது.

ஒரு நாடு சரியான பலமாக இருக்கின்றது. அந்த நாட்டினுடைய மக்கள் தங்களுடைய சுயமான பொருளாதார அரசியல் முறைகளை சரியாக வழிநடத்துகின்றார்கள் என்றால், அந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றது என்று அர்த்தம். ஆனால் அந்த ஜனநாயகம் இந்த நாட்டிலே இல்லை.

அந்த ஜனநாயககத்தை இல்லாது செய்கின்ற பணிகளில் மிகப்பெரிய அளவிலே ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். அவரோடு சேர்ந்த பலரும் அதற்காக உழைக்கிறார்கள்.

அவர்கள் மிக ரகசியமான முறையில் தந்திரோபாயமாக தங்களுடைய அழிவு நிலையில் இருக்கிற ஐக்கிய தேசியக் கட்சியை நிமிர்த்துவதற்கான வழிமுறைகள் பற்றி யோசிப்பதுடனும், தங்களுடைய அங்கத்தவர்கள், கட்சி மற்றும் பதவிகளை தக்க வைப்பது தொடர்பிலே பல வியூகங்களை ரணில் விக்ரமசிங்க தலைமையில் வகுக்கின்றது. ஆனால் நாடு பற்றிய வியூகங்கள் அவர்களிடம் இருக்கவில்லை.

இந்த தேர்தலில் கூட அவர்களின் எண்ணங்களைதான் இந்த விடயங்கள் பிரதிபலிக்கின்றது. ஆகவே இந்த சவால்களை எதிர்கொண்டு, தேர்தலுக்கு தயாராகின்றோம் என்ற செய்தியை மக்களுக்கு சொல்ல வேண்டும்.

ஏனென்றால், நாங்கள் அடிப்படை உரிமைக்காகவும், வாழ்வியல் உரிமைக்காகவும் இந்த தேர்தல் பயணத்தை மேற்கொள்பவர்கள். நாங்கள் இதன் மூலம் நாடு பிடிக்கிற விடயத்துக்குரியவர்கள் அல்ல. எங்களுக்கு முன்னால் பல போராட்டங்கள் விரிந்துபோய் கிடக்கின்றது.

பல போராட்டங்கள் எங்களை அழைக்கின்றது. நாங்கள் இந்த மண்ணிலே வாழ வேண்டியதற்காக போராட வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆகவே, போராட வேண்டிய காலத்துக்கான அறிகுறியாக இந்த தேர்தலை ஓர் களமாக நாங்கள் பயன்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரயிலில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

east tamil

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

UPDATE: ‘மாமா பணத்தை தராததால் மாணவியை கடத்தினேன்’: மச்சான் கூறிய காரணம்!

Pagetamil

ரோஹிங்கிய முஸ்லிம் தொடர்பில் மீள குற்றப்புலனாய்வு விசாரணை

east tamil

தமிழ் மக்களின் போர்க்கால வாழ்க்கையை ஆவணமாக்கியவர் காலமானார்!

Pagetamil

Leave a Comment