சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் தங்கியிருந்த கட்டிடத்தை இஸ்ரேலிய ஏவுகணை ஒன்று ஞாயிற்றுக்கிழமை தாக்கியதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.
மூத்த அதிகாரிகள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் புலனாய்வுத் தலைவர்கள் வசிக்கும் கஃபர் சோசா பகுதியே தாக்கப்பட்டது.
“காலை 00:22 மணிக்கு (2222 GMT), டமாஸ்கஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள குடியிருப்புகள் உட்பட பல பகுதிகளை குறிவைத்து ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளின் திசையில் இருந்து இஸ்ரேலிய எதிரி வான்வழி ஆக்கிரமிப்பை நடத்தியது” என்று சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிரிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட முதல்த தகவலின்படி, ஐந்து பேர் இறந்தனர் மற்றும் பொதுமக்கள் உட்பட 15 பேர் காயமடைந்தனர். பின்னர், மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் 15 பேர் கொல்லப்பட்டதாகக் கூறியது.
தாக்குதல் ஒரு குறிப்பிட்ட நபரை இலக்காகக் கொண்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
அரசாங்க ஊடகங்கள் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ, தாக்குதலில் 10 மாடி கட்டிடம் மோசமாக சேதமடைந்துள்ளதை கண்பித்தது.
கடந்த மாதம் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு வீரர்கள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்ட ஒரு மாதத்திற்கு பின்னர் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
2011 இல் சிரியப் போரின் தொடக்கத்தில் இருந்து இஸ்ரேல் அதன் அண்டை நாடுகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது முதன்மையாக சிரிய இராணுவ நிலைகள், ஈரானியப் படைகள் மற்றும் சிரிய ஆட்சியின் நட்பு நாடுகளான லெபனானின் ஹெஸ்பொல்லாவை குறிவைத்தது.
இந்த தாக்குதல்கள் சிரியாவில் ஈரானின் வளர்ந்து வரும் செல்வாக்கை தடுப்பதை மெதுவாக்கும் முக்கிய நோக்கமாக இருந்த குறைந்த-தீவிர மோதலின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும் என்று நம்பப்படுகிறது.
இந்த ஏவுகணை தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
43,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற பெப்ரவரி 6 நிலநடுக்கத்தில் இருந்து சிரிய அரசாங்கம் மீண்டு வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.