24.6 C
Jaffna
February 6, 2025
Pagetamil
உலகம்

ஐரோப்பா மறைமுகமாக ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ளது: ஹங்கேரி பிரதமர்!

உக்ரைனுக்கான இராணுவ ஆதரவின் காரணமாக ஐரோப்பா ரஷ்யாவுடன் மறைமுகமாக போரில் ஈடுபட்டுள்ளதாக ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் நாட்டுக்கு ஆற்றிய உரையில் இதனை தெரிவித்தார்.

இந்த காரணத்தினால் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப மறுத்ததாக குறிப்பிட்டார்.

“ஐரோப்பா போரில் மூழ்கி வருகிறது, உண்மையில் அவர்கள் ஏற்கனவே ரஷ்யாவுடன் மறைமுகமாக போரில் ஈடுபட்டுள்ளனர்” என்று  கூறினார்.

உக்ரைனில் சண்டை பல ஆண்டுகளாக தொடரும் என்று கணித்துள்ளார்.

நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஹங்கேரியின் தலைவரான ஆர்பன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டடுள்ளார்.

ஹங்கேரி தனது கிழக்கு அண்டை நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்காது என்றும் ரஷ்யாவை பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதவில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.

“மூன்றாவது நாட்டைக் கூட்டாகத் தாக்குவதற்கு” பயன்படுத்தப்படுவதை விட ஒரு பாதுகாப்பு கூட்டணியாக இருக்க வேண்டும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருநங்கைகள் விளையாட்டில் பங்கேற்க தடை – ட்ரம்ப்

east tamil

DeepSeek ஆபத்தானது

east tamil

அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள்

east tamil

சுவீடன் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி

east tamil

அமெரிக்க கைதிகளை நரகத்திற்கு அனுப்பும் திட்டம்

east tamil

Leave a Comment