மாவனல்லை உள்ளூராட்சி சபை தலைவர் நோயல் ஸ்டீபனை அந்தப் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி சப்ரகமுவ மாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, மாவனல்லை உள்ளூராட்சி சபையின் தலைவர் பதவிக்கு உப தலைவரான கோரலே கெரடா பியதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க உள்ளூராட்சி சபை சட்டத்தின் 185(3) (அ) (i) பிரிவின்படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய மேற்படி வர்த்தமானி அறிவித்தலை சப்ரகமுவ மாகாண ஆளுநர் திகிரி கொப்பேகடுவ வெளியிட்டுள்ளார்.
நோயல் ஸ்டீபன் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1