25.3 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை

பலர் பார்த்திருக்க மனைவியை குத்திக்கொன்ற கணவன்: சுவிஸில் தமிழர் கைது!

சுவிற்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை குத்திக் கொலை செய்துள்ளார். பொதுமக்கள் நடமாட்டமுள்ள சிற்றுண்டிக் கூடத்தில் இந்தச்சம்பவம் நடந்தது.

ஆர்கெவ், கான்டன் பகுதியிலுள்ள ரப்பர்ஸ்வில் பகுதியிலுள்ள “பெர்னர்ஸ் எஸ்வெர்க்” என்ற  சிற்றுண்டிக்கூடத்தில் இந்த கொலை நிகழ்ந்தது.

உள்ளூர் காவல்துறையின் கூற்றுப்படி, இது ஒரு உறவு குற்றம்.

ஒரு நபர் தனது மனைவியைக் கொன்றார். இலங்கையை சேர்ந்த தமிழ் தம்பதியினருக்கிடையிலான தகராறே கொலையில் முடிந்துள்ளது. 47 வயதான மனைவி கொல்லப்பட்டார். 57 வயதான கணவர் கைதானார்.

கைதானவர் தனத மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றார்.

காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. தகலறிந்து பொலிசார் அங்கு சென்ற போது, பாதிக்கப்பட்டவர் இரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து கிடந்தார். அவரை காப்பாற்றும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

கணவன் எதிர்ப்பின்றி பொலிசாரிடம் சரணடைந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

east tamil

மதுபோதையில் டிப்பர் செலுத்தியவரால் கொடூரம்: கிளிநொச்சியில் 2 வயது சிறுமி பலி!

Pagetamil

ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய அட்டை

Pagetamil

ஒரு கிலோ கோழி இறைச்சி இலஞ்சம் வாங்கியவர்கள் கைது!

Pagetamil

பரந்தனில் பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி

east tamil

Leave a Comment