13 வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (08) பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் பௌத்த பிக்குகளின் குழுவொன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டது.
பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றத்தை நோக்கி செல்ல முற்பட்ட பிக்குகள் குழுவை பொலிசார் தடுத்து நிறுத்தினர்.
13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிக்குகள் இன்று (08) கோட்டே, பரகும்பா பிரிவெனாவிற்கு அருகில் இந்த எதிர்ப்புப் பேரணியை ஆரம்பித்துள்ளனர்.
பேரணியை பொலிஸார் தடுத்து நிறுத்திய போதும், பிக்குகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பிக்குகள் தியத்த உயனை கடந்து பொல்துவ சந்திப்பை நோக்கி பேரணியாக சென்றனர்.
அங்கு 13ஆம் திருத்தத்தின் நகலை தீயிட்டு எரித்தனர்.
பொலிசாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய பலாங்கொட கஸ்ஸப தேரர், ஊழலுக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டாளர் காமந்த துஷார பொலிசாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.