அரசாங்கத்தின் புதிய வருமான வரி முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தொழில் வல்லுநர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை பிரதேசத்தில் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலைமையால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியின் இருபுறமும் மூடப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
பல தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக கொழும்பு கோட்டையை சூழவுள்ள பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.
அங்கு பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1