திருகோணமலை, கன்னியா- சாரதாபுரம் வீதியில் இன்று (04) பிற்பகல் மரத்தடியில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றை உப்புவெளி பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த இடத்தில் யானை வேலியை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த சிவில் காவலர் ஒருவர் மரத்தடியில் அழும் சத்தம் கேட்டு சென்ற போது, சிசுவை கண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தை குணமடைந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது குழந்தை மேலதிக நடவடிக்கைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.