இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், கட்சியின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்து ஒதுங்கியுள்ளதாக தமிழ்பக்கம் அறிகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்லும் முடிவை இலங்கை தமிழ் அரசு கட்சி எடுத்ததை தொடர்ந்து, அந்த கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சீ.வீ.கே.சிவஞானத்தின் முடிவும் கட்சிக்கு மேலும் பின்னடைவை கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை தமிழ் அரசு கட்சியினால் மட்டக்களப்பில் திட்டமிடப்பட்டுள்ள பெப்ரவரி 4 கரிநாள் ஆர்ப்பாட்டத்திலும் அவர் கலந்து கொள்ள மாட்டார் என தெரிய வருகிறது.
யாழ் மாநகரசபையின் முதல்வராக்கலாமென குறிப்பிட்டு வித்தியாதரனை தேர்தலில் போட்டியிட அழைத்து வந்து, பின்னர் கைகழுவி விட்டது மற்றும் அவருக்கு தெரியாமல் கட்சி நகர்வுகள் சில மேற்கொள்ளப்பட்டமை போன்ற காரணங்களினாலேயே அவர் அதிருப்தியடைந்துள்ளதாக அறிய முடிகிறது.