தமிழில் ‘கேடி’, விஜய் நடித்த ‘நண்பன்’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இலியானா. தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், இப்போது இந்திப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘‘சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்ததால் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை. என் உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி, இப்போது நன்றாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1