24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
உலகம்

அராஃபத்துக்கு மாற்றாக ஒருவரை கண்டறிய சிஐஏவுக்கு உத்தரவிட்ட அமெரிக்க ஜனாதிபதி புஷ்: ஆவணங்கள் வெளியாகின!

2001 ஆம் ஆண்டு பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத்துக்குப் பதிலாக ஒருவரைத் தேடுமாறு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் சிஐஏ-க்கு உத்தரவிட்டார் என்று சமீபத்தில் வெளியான பிரிட்டன் ஆவணங்களை மேற்கோள் காட்டி பிபிசி தெரிவித்துள்ளது.

2000 ஆம் ஆண்டில் அராஃபத்துக்கும் அப்போதைய இஸ்ரேலியப் பிரதமர் எஹுட் பராக்கும் இடையே நடந்த கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து- இரண்டாவது இன்டிபாடா தீவிரமடைந்திருந்த சமயத்தில்- அமெரிக்கா இந்த முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

தற்போது வெளியான ஆவணங்களின்படி, எஹுட் பராக்கிற்குப் பின் வந்த ஏரியல் ஷரோன், பாலஸ்தீனியர்களிடையே பிளவுகளை விதைக்க காசா பகுதியைப் பயன்படுத்துவார் என்று புஷ் முன்கூட்டியே எதிர்பார்த்தார்.

புதிய பழமைவாதிகள் ஆதிக்கம் செலுத்திய புஷ் மற்றும் அவரது நிர்வாகம் வெள்ளை மாளிகையில் நுழைந்த சில மாதங்களுக்குப் பிறகு பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த விவாதங்களை ஆவணங்கள் கையாள்கின்றன.

ஜனவரி 2001 இல் புஷ் பதவியேற்றபோது, இரண்டாவது பாலஸ்தீனிய எழுச்சி (இன்டிபாடா) உச்சத்தில் இருந்தது. செப்டம்பர் 2000 இன் பிற்பகுதியில் ஷரோன் அல் அக்ஸா மசூதியின் முற்றத்தில் நுழைந்ததையடுத்து இந்த எழுச்சி வெடித்தது.

புஷ் நிர்வாகம் இஸ்ரேலுடன் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு அடித்தளம் அமைப்பதற்காக எழுச்சியை நிறுத்துமாறு அரபாத்தை அழைத்தது. ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இஸ்ரேலியப் படைகளிடமிருந்து பாலஸ்தீனிய குடிமக்களைப் பாதுகாக்க ஐ.நா பார்வையாளர் படையை அனுப்ப முன்மொழிந்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் ஒரு வரைவுத் தீர்மானத்தையும் அது வீட்டோ செய்து நிறுத்தியது.

பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்ட பின்னர், புஷ்ஷுக்கும் அப்போதைய பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயருக்கும் இடையே தொலைபேசி பேச்சுக்கள் நடத்தப்பட்டன, அதில் அவர்கள் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் பற்றி நீண்ட நேரம் விவாதித்தனர்.

பேச்சுவார்த்தையின் குறிப்புக்களின்படி, அராபத் ஒரு பொறுப்பு என்று பிரதமர் கூறினார்.

பாலஸ்தீனத் தலைவர் “அவரால் ஆக்கப்பூர்வமாக என்ன செய்ய முடியும் என்பதற்கான வரம்புகளை அடைந்துவிட்டார்,  அவர் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள மட்டுமே வேலை செய்கிறார்” என்று அவர் கூறினார்.

அராஃபத்திடம் “இனி வழங்க எதுவும் இல்லை” என்று அவர் மேலும் கூறினார், தலைவர் தன்னால் முடிந்த அனைத்து சலுகைகளையும் செய்துள்ளார் என்பதைக் குறிக்கிறது.

பிளேயர் கூறியதை புஷ் ஆமோதித்தார், பின்னர் அராஃபத்தை “பலவீனமான மற்றும் பயனற்றவர்” என்று விவரித்தார். பாலஸ்தீனிய தலைவருக்கு அடுத்த சாத்தியமான வாரிசுகளைத் தேடுமாறு சிஐஏவிடம் கேட்டுக் கொண்டதை அவர் வெளிப்படுத்தினார்.

ஆனால் சிஐஏ “பாலஸ்தீனிய சூழலை முழுமையாக ஆராய்ந்து அரபாத்திற்கு பதிலான ஒருவர் கிடைக்கவில்லை என்று முடிவு செய்தது” என்று கூறினார்.

அராஃபத்திற்கு மாற்றாக புஷ்ஷின் தேடுதலுடன் அந்த நேரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கொலின் பவல் உடன்படவில்லை என்பதை பிரிட்டன் ஆவணங்கள் வெளிப்படுத்தின.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, நவம்பர் 11, 2004 அன்று, அவரது உடைகள் மற்றும் உடலில் காணப்பட்ட பொலோனியம் என்ற நச்சுப் பொருளால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, பாரிஸ் மருத்துவமனையில் அராபத் இறந்தார்.

பாலஸ்தீனியர்களும் அரேபியர்களும் இஸ்ரேல் அவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டினர். ஆனால் இஸ்ரேல் அதை மறுத்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகின் மிக வயதான பெண் காலமானார்!

Pagetamil

இறந்த குட்டியின் உடலை சுமந்தபடி சுற்றித்திரியும் திமிங்கிலம்!

Pagetamil

16 முறை விண்வெளியில் புத்தாண்டை கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

east tamil

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி

Pagetamil

Leave a Comment