இந்தி திரையுலகில் பிரபல நடிகராக திகழ்பவர் ரன்பீர் கபூர். கடந்த வருடம் தனது நீண்ட கால காதலியான பிரபல நடிகை ஆலியா பட்டை திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ரன்பீர் கபூர் வெளியேறி உள்ளார். அவரை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். பலர் அவரை பார்த்த மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர்.
அப்போது, ரன்பீரை பார்க்க வந்த ரசிகர் ஒருவர், அவரை அணுகி தனது மொபைல் போனில் ஒரு செல்பி புகைப்படம் எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். ரன்பீரும் சரியென சம்மதித்து நின்றுள்ளார்.
ரசிகர் மொபைல் போனை இயக்க முயற்சித்து உள்ளார். ஆனால், அந்த நேரம் பார்த்து ரசிகரின் போன் உடனடியாக வேலை செய்யவில்லை. இதனால், மீண்டும் போனை இயக்கி பார்த்து உள்ளார்.
இரண்டு முறை இப்படி ஆனபோதும், சுற்றியிருந்தவர்களை அமைதிப்படுத்தி விட்டு புகைப்படத்திற்கு தன்னை ரன்பீர் தயார் படுத்தி கொண்டார். ஆனால், ரசிகரின் செல்பி எடுக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை.
இதனால், சிறிது நேரம் அமைதியுடன் இருந்த ரன்பீர், பொறுமையிழந்து, ரசிகரின் மொபைல் போனை பறித்து, தனக்கு பின்புறம் தரையில் வீசி எறிந்து உள்ளார்.
Celebrities should think twice before acting on impulse like #Ranbirkapoor did today. pic.twitter.com/lxrh0apfwj
— Viral Bhayani (@viralbhayani77) January 27, 2023
இதனை பார்த்த உடனிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ரசிகருக்கும் பேரதிர்ச்சி ஏற்பட்டது. ரன்பீர் கபூர் பொதுவாக கோபப்படும் நபர் இல்லை. நகைச்சுவையாக நடந்து கொள்ள கூடியவர். பல ஆண்டுகளாக திரையில் மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு அளித்து வந்த அவரது இந்நடவடிக்கையால் அந்த ரசிகர் சற்று மனமுடைந்து போனார்.
அவர் நடித்த, பர்பி, வேக் அப் சித், யே ஜவானி ஹை தீவானி உள்ளிட்ட படங்களில் கூட அவர் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையிலான தனது நடிப்பை வெளிப்படுத்தியவர். அவரது இந்த கோபத்திற்கு காரணம் என சில ரசிகர்கள் கூறும்போது, குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகளால், அது அவரது படங்களிலும் கூட தற்போது வெளிப்பட தொடங்கியுள்ளது.
முன்பெல்லாம் திரையில் நகைச்சுவையாக தோன்றி ரசிகர்களை மகிழ்வித்தவர். தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது, அவரது வாழ்க்கையின் கசப்பான சம்பவங்கள் திரையிலும் தாக்கம் ஏற்படுத்துகிறது என கூறுகின்றனர்.
ஒரு சிலர் அவர் உடைத்தது ரசிகரின் போனை அல்ல. தனது சிறுவயது கனவு ஹீரோவை பார்க்க ஓடி வந்த ரசிகரின் மனது என கூறுகின்றனர். எனினும் ஒரு சிலர், இதெல்லாம் ஒரு விளம்பர படப்பிடிப்புக்காக நடந்த விசயம் என்றும் கூறி வருகின்றனர்.