இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் கம்பியால் தாக்கி 29 வயதுடைய இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று முன்தினம் (26) வீதியில் சென்றுகொண்டிருந்தவேளை போதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த இருவர் அவருடன் முரண்பட்டனர். பின்னர் முரண்பாடு கைகலப்பாக மாறியது.
இதன்போது அவர்கள் இருவரும் சேர்ந்து குறித்த நபரின் தலை மீது கம்பியால் தாக்கினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் அயலில் உள்ளவர்கள் மூலம் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நிரோஜன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
இந்த படுகொலை குறித்து இருவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனும் 20 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1