25.4 C
Jaffna
January 16, 2025
Pagetamil
இலங்கை

யாழில் 30 நாள் குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் புத்தூர் நவக்கிரி பகுதியில் பிறந்து முப்பதே நாட்களான குறித்த குழந்தை தாயாரிடம் பால் அருந்திக் கொண்டிருந்தபோது புரக்கேறியதில் உயிரிழந்துள்ளது.

புத்தூர் நவக்கரி மாதா கோவிலடியை சேர்ந்த குடும்பம் ஒன்றில் பிறந்த மூன்றாவது ஆண் குழந்தை தாயிடம் பாலருந்திய போது திடீரென பால் புரையேறியது. இதனை அடுத்து குழந்தை அச்சுவேலி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குழந்தை உயிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று 31ஆம் நாள் நிகழ்வுகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த வேளையில் குழந்தையின் இறப்புச் சம்பவம் அவர்களது குடும்பத்தை பாரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் – மனோ கணேசன் எம்பி

east tamil

இன்று காலை வரையான 24 மணித்தியாலத்தில் பதிவான மழைவீழ்ச்சி விபரம்

Pagetamil

18ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கில் கன மழைக்கு வாய்ப்பு

Pagetamil

சீகிரியாவில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்

east tamil

தேசிய மக்கள் சக்தி நிர்வாக அலுவலகம் தாளையடியில் திறந்துவைப்பு

east tamil

Leave a Comment