மகன் இறந்து விட்டதால் 28 வயது மருமகளை மாமனார் மனைவியாக்கியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள கோரக்பூர் என்ற மாவட்டத்தின் சாபியா உம்ராவ் கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் யாதவ் (70). இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். அவருடைய மனைவி இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து இவரது மூன்றாவது மகனும் சில ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்து விட்டார்.
இந்நிலையில் இவர் தனது மருமகளை பூஜா (28) சமீபத்தில் கோவிலில் வைத்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும், பூஜா தனது புதிய உறவில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கணவர் இறந்த பிறகு பூஜா தனிமையில் இருந்தாக சிலர் கூறுகின்றனர். அதனால் மாமனாரை மணக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
முதியவரின் திருமணம் குறித்த பேச்சு சமூக ஊடகங்கள் மூலம் அந்த கிராமத்தையும் காவல் நிலையத்தையும் எட்டியுள்ளது.
வைரலாகி வரும் புகைப்படத்தின் மூலம் தான் இந்த திருமணம் குறித்து எங்களுக்கு தெரிய வந்ததாக காவல் நிலைய அதிகாரி கூறினார். இது தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை. என்றும் இது இருவருக்கு இடையே உள்ள பரஸ்பர விவகாரம் என்றும், யாருக்கேனும் புகார் இருந்தால், போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.