டிக் டாக் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் புகழ்பெற்ற டான்ஸர் ரமேஷ் கே.பி பார்க் குடியிருப்பு பகுதியின் பத்தாவது மாடியில் இருந்து விழுந்து மரணம் அடைந்தார். அண்மையில் வெளியான ‘துணிவு’ படத்தில் அவர் நடித்திருந்தார்.
டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களில் மைக்கேல் ஜாக்சன் நடன அமைப்புகளால் கவனம் பெற்றவர் டான்ஸர் ரமேஷ்.தொடர்ச்சியாக பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடனமாடி ரமேஷ் பாராட்டுகளை பெற்றவர்.
அண்மையில் வெளியான ‘துணிவு’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து ரமேஷ் நடனமாடியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை புளியந்தோப்பில் உள்ள கே.பி பார்க் குடியிருப்பின் 10-வது தளத்திலிருந்து விழுந்து அவர் உயிரிழந்தார். தற்கொலையா? அல்லது தவறி விழுந்து உயிரிழந்துள்ளாரா? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.