24.9 C
Jaffna
January 23, 2025
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் 3,240 வேட்பாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகரசபை 2 நகரசபை மற்றும் பிரதேசசபைகள் உட்பட 12 உள்ளூராட்சி மன்றங்களில் 238 பேரை தெரிவு செய்வதற்கு 18 கட்சிகள் 19 சுயேச்சைக்குழுக்கள் உட்பட 3,240 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதாகவும் 145 வேட்பு மனுதாக்குதல் செய்யப்பட்டதில் 2 அரசியல்கட்சிகள் 4 சுயேச்சைக்களுக்கள் உட்பட 6 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் ஜனநாயக ஐக்கிய முன்னணி கட்சியும் முகமது உவைஸ் தலைமையிலான சுயேச்சைக்குழுவும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையில் கதிர்காமத்தம்பி சந்திரமோகன், குமாரதாஸ விஜயதாஸ ஆகியோர் தலைமையிலான 2 சுயேச்சைக்குழுவும், மண்முணைபற்று பிரதேச சபையில் சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் தலைமையிலான சுயேச்சைக்குழுவும், போரதீவுபற்று பிரதேசசபையில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியும் நிராகரிக்கப்பட்து.

இதேபோன்று கோறளைப்பற்று பிரதேச சபையில் விமலசேன லவக்குமார் தலைமையிலான சுயேச்சைக்குழுவில் ஒருவரும், கோறளைப்பற்று வடக்கில் அகில இலங்கை தமிழர் மகாசபை 2 பேரும், காத்தான்குடி நகரசபையில் ஜக்கிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலில் ஒரு வேட்பாளரும், அதேநகர சபையில் தேசிய காங்கிரஸ் 11 வேட்பாளர்களும், மட்டக்களப்பு மாநகர சபையில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் பட்டியில் இருந்து 9 பேரும், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஒருவரும். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 3 வேட்பாளர்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையில் 33 உறுப்பினர்கள் தெரிவு செய்வதற்கு 15 கட்சி மற்றும் சுயேச்சைக்குழுக்களும், ஏறாவூர் நகரசபையில் 14 பேரை தெரிவு செய்வதற்கு 15 கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும், காத்தான்குடி நகரசபையில் 14 பேரை தெரிவு செய்தற்காக 13 கட்சிகள் சுயேச்சைக்குளுக்களும், ஏறாவூர் பற்று பிரதேச சபையில் 30 பேர் தெரிவு செய்வதற்காக 14 கட்சியும் சுயேச்சைக்குளுக்களும், கோறளைப்பற்று பிரதேச சபைக்கு 23 பேரை தெரிவு செய்வதற்காக 14 கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும், கோறளைப்பற்று மேற்கு 8 பேரை தெரிவு செய்தற்கு 9 கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும், கோறளைப்பற்று வடக்கு பிரதேசசபைக்கு 18 பேரை தெரிவு செய்தற்காக 12 கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும், மண்முணை தென்எருவில்பற்று பிரதேச சபைக்கு 20 பேரை தெரிவு செய்தற்காக 9 கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும், மண்முணைபற்று பிரதேச சபைக்கு 16 பேரை தெரிவு செய்வதற்காக 11 கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும், மண்முணைமேற்கு பிரதேச சபைக்கு 16 பேரை தெரிவு செய்தற்காக 11 கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும், மண்முணை தென் மேற்கு பிரதேச சபைக்கு 16 பேரை தெரிவு செய்தற்காக 10 கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும், போரதீவுபற்று பிரதேச சபைக்கு 16 பேரை தெரிவு செய்வதற்காக 6 கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களுமாக 238 பேரை தெரிவு செய்வதற்காக 3240 பேர் போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நிலாவெளி வைத்தியசாலையில் பறிபோன உயிர்; வைத்தியசாலையின் அசமந்தம்

east tamil

அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற தம்பி தலைமறைவு

east tamil

மூதூரில் வெள்ள நீருக்கு எதிரான போராட்டம்

east tamil

சிறுவர்களின் உயிரை பழிவாங்கிய குறிஞ்சாக்கேணி விடயம் முடிவுக்கு வந்தது

east tamil

அனுர ஆட்சியிலும் இலுத்தடிக்கபடும் மயிலத்தமடு

east tamil

Leave a Comment