எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் களமிறக்கப்படவுள்ளார் என தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.
எதிர்வரும் உள்ளூராட்சிசபை தேர்தலிற்கான வேட்புமனு தாக்கலிற்கான இறுதி நாள் இன்றாகும். கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன. இந்த நிலையில், கட்சிகளின் பிரதான வேட்பாளர்கள் பற்றிய சில விபரங்களை தமிழ்பக்கம் பெற்றுள்ளது.
அது குறித்த செய்திகளை தமிழ்பக்கம் தொடர்ந்து வெளியிடும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் களமிறக்கப்படவுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழ் தேசிய கட்சியை சேர்ந்தவர் எம்.கே.சிவாஜிலிங்கம்.
யாழ் மாநகரசபையில் தமிழ் தேசிய கட்சிக்கு 11 வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சட்டத்தரணி கணதீபனும் போட்டியிடுகிறார்.
இதேவேளை, திருகோணமலை நகரசபை முதல்வர் வேட்பாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் திருமதி சூரியகலா களமிறக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை நகரசபையின் முன்னாள் நகரபிதா சூரியமூர்த்தியின் மகளான திருமதி சூரியபிரபா, விரிவுரையாளராக செயற்பட்டு வருகிறார்.