எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு நகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று காலை தனது பதவியை இராஜினாமா செய்தார்.
பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த பின்னர் அவர் பதவி விலகியுள்ளார்.
கொழும்பு மாநகரசபை முதல்வர் வேட்பாளராக அவரை முன்னிலைப்படுத்த கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்ட மக்கள் எண்பத்தி ஏழாயிரம் வாக்குகளை தமக்கு வழங்கியதாகவும், அந்த நன்றியுள்ள மக்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.