மாத்தளை, கலேவெல, அந்தவல பிரதேசத்தில் வெறிச்சோடிய வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காதல் ஜோடியான சிறார்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
14 வயதான சிறுமியும், 17 வயதான சிறுவனுமே இல்லாறு சடலமாக மீட்கப்பட்டனர்.
கலேவெல அம்பன்பொல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த மாணவி, சில காலமாக மாணவனுடன் காதல் உறவில் இருந்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் மாணவி, காதலனுடன் ஓடிச் சென்றுள்ளார்.
பொலிசாரிடம் முறையிட்டதை தொடர்ந்து காதல் ஜோடியை மீட்கப்பட்டது. மாணவி தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் காதல் ஜோடி தலைமறைவானது.
அவர்களை பற்றிய தகவல் பல நாட்களாக கிடைக்கவில்லை. அந்தவல பிரதேசத்தில் மாணவனின் உறவினர் வீடொன்றில் இருவரும் தங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று பொலிசார் அந்த வீட்டிற்கு சென்றனர்.
அங்கு காதலனும், காதலியும் வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டனர்.
இருவரும் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது கொல்லப்பட்டனரா என்பதை உறுதி செய்ய பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.