28.9 C
Jaffna
April 15, 2025
Pagetamil
உலகம்

மின்னல் வேக ஓட்டவீரர் உசைன் போல்ட்டின் ரூ.465 கோடி நிதி மோசடி

மின்னல் வேக ஓட்டக்காரர் என அறியப்படும் தடகள வீரர் உசைன் போல்ட் சுமார் 465 கோடி ரூபாய் நிதி மோசடிக்கு ஆளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்.

ஜமைக்காவை சேர்ந்த போல்ட், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 4×100 ரிலேவில் உலக சாதனை படைத்துள்ளார். 2008, 2012, 2016 என தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றவர். கடந்த 2017 இல் ஓய்வு பெற்றார்.

இந்த சூழலில்தான் அந்த நாட்டில் கிங்ஸ்டன் நகரில் இயங்கி வரும் நிதி முதலீட்டு நிறுவனமான Stocks and Securities Ltd இல் அவரது கணக்கில் இருந்த 12.7 மில்லியன் டொலர்கள் மாயமாகி உள்ளன. தற்போது அந்த கணக்கில் வெறும் 12 ஆயிரம் டொலர்கள் மட்டுமே இருப்பதாக அவரது வழக்கறிஞர் லின்டன் கார்டன் தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனம் தங்களது நிதியை திரும்ப தராத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடும் திட்டம் தங்களுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய ஏமாற்றம். இந்த மோசடியில் இருந்து போல்ட் தனது பணத்தை வெற்றிகரமாக மீட்பார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தங்கள் நிறுவனத்தில் முன்னாள் ஊழியர் ஒருவர் மோசடி செய்து பல்வேறு கணக்குகளில் இருந்து பணத்தை தவறான வழியில் கையாண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஜமைக்கா நாட்டின் நிதி மோசடி தடுப்புக் குழு விசாரித்து வருவதாக தகவல். போல்ட் மட்டுமல்லாது பல்வேறு தனி நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்

மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்ட பொதுமக்களே கொல்லப்பட்டனர்

Pagetamil

ஈரானுடான இராஜதந்திர முயற்சி தோல்வியடைந்தால் இராணுவம் பயன்படுத்தப்படும்!

Pagetamil

ஈரான்-அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் அப்பாஸ் அரக்சி யார்?

Pagetamil

உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளின் உரிமையை ரஷ்யாவிற்கு விட்டுக்கொடுப்பதே போர் நிறுத்தத்திற்கு சிறந்த வழி!

Pagetamil

வரிப் போர்: ஹாலிவுட் படங்களை குறி வைக்கும் சீனா!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!