27 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இந்தியா

கள்ளக்குறிச்சியில் கர்ப்பிணி உயிரிழப்பு; மருத்துவர் இல்லாததால் நேர்ந்ததாக உறவினர்கள் போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் பிரசவத்திற்கு அரசு ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட கர்ப்பிணி பணியில் மருத்துவர் இல்லாததால் அலைக்கழிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் சேராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நேற்று மாலை பிரசவத்திற்காக பெண் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு பிரசவம் பார்க்க மருத்துவர்கள் யாரும் இல்லாமல் செவிலியர் மட்டும் இருந்துள்ளார். அதனால் அந்த பெண்ணிற்கு இரவு பிரசவம் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

மேலும் மேல் சிகிச்சைக்கு செல்ல 108 ஆம்புலன்ஸ் வாகனம் இல்லை என்றும் அதனால் அந்த கர்ப்பிணி பெண், அவரது கருவில் இருந்த குழந்தையுடன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.

இதைக் கண்டித்து உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் இன்று அதிகாலை 5 மணி முதல் சாலையில் கற்களை கொட்டி பேருந்துகள் மற்றும் பால் வண்டி வாகனங்களை செல்ல விடாமல் சாலை மறியல் ஈடுபட்டனர். 150 க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

Leave a Comment