26.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

ஆடம்பர செலவிற்கு பணமுள்ளது; தேர்தலிற்கு மட்டும் பணமில்லையா?: ஜேவிபி கேள்வி!

நாட்டில் சுதந்திரம் இல்லை. ஏன் சுதந்திர தினத்தை கொண்டாடப் போகின்றார்கள் என தெரியவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரட்நாயக்க கேள்வி எழுப்பினார். இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்

கடந்த காலத்தில் நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களை விரட்டுவதற்கு ஜனநாயகரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தற்போது சிறையில் அடைத்திருக்கிறீர்கள் பல இளைஞர்கள் யுவதிகள் சிறையில் வாடுகின்றார்கள்.

அதேபோல நாட்டில் தற்பொழுது சுதந்திரம் இல்லை போராடுவதற்கு ஜனநாயக உரிமை இல்லை போராட்டக்காரர்கள் கொடூரமாக அடக்கப்படுகின்றார்கள் அவ்வாறான நிலையில் சுதந்திர தினம் தேவைதானா.

முதலில் அவர்களுக்கு விடுதலையை கொடுங்கள். அதன் பிறகு நீங்கள் சுதந்திரத்திர தினத்தை கொண்டாடலாம்.

தற்பொழுது பெருமளவுநிதியினை செலவழித்து சுதந்திர தினம் தேவைதானா எனஅனைவரும் கேள்வி எழுப்புகின்றார்கள்.

நாட்டிலே சுதந்திரம் இல்லை .பிறகு ஏன் இந்த சுதந்திர தினகொண்டாட்டம் என மக்கள் விடுதலை முன்னணியாகிய நாங்கள் கேள்வி கேட்க விரும்புகின்றோம்.

அதேபோல உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் அடிப்படையில் மார்ச் 20 ம் திகதிக்குமுன்னர் தேர்தல் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்.

கடந்த வருடம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்ட சபைகளுக்கான தேர்தல் கட்டாயமாக மார்ச் 20 க்கு முன்னர் நடாத்தப்பட வேண்டும்.

2018 ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் தான் இந்த தேர்தல் முறைகள் மாற்றப்பட்டது. 2018 ஆம் ஆண்டு கோடிக்கணக்கான பணம் செலவழிக்கப்பட்டு உள்ளாட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தீர்மானிக்கப்பட்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இந்த முறை மாற்றி அமைக்கப்பட்டது.

தற்போது ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்கிரமசிங்க உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு முயற்சி செய்கின்றார். அதாவது அதிகளவான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டால் அது நாட்டின் செலவினங்கள் அதிகரிக்கும் என காரணம் கூறுகின்றார்கள்.

நேற்று ஜீவன் தொண்டமானுக்கும் பவித்திரா வன்னியாராச்சிக்கும் அமைச்சு பதவி வழங்கியிருக்கின்றார்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு கோடிக்கணக்கான பணத்தினை செலவழிக்கவிருக்கின்றனர். அதே போல யாழ்ப்பாணத்திற்காக வருகை தந்த ரணில் விக்கிரமசிங்க கோடிக்கணக்கில் பணத்தினை செலவழித்திருக்கின்றார். ஆனால்தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என கூறுவது வேடிக்கையான விடயமாகும்.

இந்தியாவிலிருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளார்கள். அதேபோல் போலீசாருக்கு வாகனங்களை பெற்றிருக்கின்றார்கள். இதற்கெல்லாம் எங்கே கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த நிதியெல்லாம் எங்கே கொண்டு செல்லப்படுகின்றது என்பது எமக்கு சந்தேகமாக உள்ளது. போலீசாருக்கு நவீனரக வாகனம் தற்போது தேவைதானா. நாட்டில் பணம் இல்லை என கூறுகின்றீர்கள் போலீசாருக்கு நவீன ரக வாகனங்கள் தேவைதானா?

நாட்டில் ஆடம்பர செலவுகளுக்கு பணத்தை செலவழிக்கின்றார்கள். ஆனால் இந்த தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என கூறுவது வேடிக்கையான விடயமாக உள்ளது.
நாட்டில் ஒரு நாட்டில் ஒரு தேர்தலை நடத்தி ஜனநாயக முறைப்படி மக்கள் ஒரு புதிய ஆட்சி முறையை உருவாக்குவது மக்களுக்குள்ள ஜனநாயக உரிமை. அதனை இந்த அரசாங்கம் பின் போடுமாக இருந்தால் தோல்வியடைந்த அரசாகவே நாங்கள் கருத வேண்டி வரும். குறிப்பாக 100 கோடி ரூபாய் நிதியை பெறுவதற்கு அரசாங்கத்திற்கு இயலாமையாக இருந்தால் இந்த அரசாங்கம் ஒரு தோற்ற அரசாகவே நாங்கள் கருத வேண்டி வரும். ஆனால் மக்களின் ஜனநாயக உரிமை ஆன தேர்தலை பிற்போடுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜேவிபி ஆட்சியை தக்க வைக்க யாழில் சங்கம் அமைத்த குழு!

Pagetamil

புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும்

Pagetamil

ஊர்காவற்துறை விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

Pagetamil

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் பணிப்பாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil

Leave a Comment