Pagetamil
கிழக்கு

கல்முனை மாநகர சபைக்கு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

கல்முனை மாநகர சபைக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு விடுக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இன்று வரை ஏற்றுக் கொள்வதைத் தடுத்து, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

எம்.ஏ. மொஹமட் சலீம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இன்றைய தினம்(வியாழக்கிழமை) குறித்த மனு மீண்டும் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கல்முனை மாநகர சபையின் சார்பில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை வழக்கு விசாரணை முடியும் வரை நீடிப்பதாக உயர் நீதிமன்றம் இன்று (19) தீர்ப்பளித்துள்ளது.

இந்தநிலையில் தீர்ப்பு வழங்கப்படும் வரை குறித்த இடைக்கால தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதன்படி மனுவை மார்ச் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கல்முனை மாநகர சபையின் சார்பில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை வழக்கு விசாரணை முடியும் வரை நீடிப்பதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த அரச சேவை ஆணைக்குழு உறுப்பினர் ஏ. எல். எம். சலீம் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதி ஏ. ஆர். எம். அசீம் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்று உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியின் பின்னணி

சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எல்.எம். சலீம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை கவனத்திற் கொண்ட நீதிமன்றம், இந்த இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியாக இருந்து வந்த சாய்ந்தமருது பிரதேசத்துக்கென 2020ஆம் ஆண்டு நகர சபையொன்று பிரகடனப்படுத்தப்பட்டது.

இதன்படி குறித்த நகர சபைக்கான தேர்தலை நடத்தாமல் விடுவதென்பது தனது அடிப்படை உரிமையை மீறுவதாகத் தெரிவித்தும், சாய்ந்தமருது நகர சபைக்கான தேர்தலை நடத்துமாறு உத்தரவிடக் கோரிக்கையும் ஏ.எல்.எம். சலீம் தனது மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த வேட்பாளர் ஏ.எல்.எம். சலீம் என்பவரே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராகப் பதவி வகிக்கும் சலீம், இதற்கு முன்னர் அரசாங்க தகவல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருந்தார்.

சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வந்த நிலையில், இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

சாய்ந்தமருதுக்கான நகர சபை

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசமாக இருந்து வந்த சாய்ந்தமருதுக்கு – உள்ளுராட்சி சபையொன்று வழங்கப்பட வேண்டுமெனும் கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்தது வந்தது.

இந்த நிலையில் கடந்த 2020 பெப்ரவரி 14ஆம் திகதி சாய்ந்தமருது நகர சபை பிரகடனப்படுத்தப்பட்டது.

2162/50 இலக்கத்தையுடைய அந்த வர்த்தமானி அறிவித்தலில், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி சாய்ந்தமருது நகர சபை அமுலுக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆயினும், சாய்ந்தமருதுக்கு நகர சபையை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என, 2020 பெப்ரவரி 20ஆம் திகதி, அப்போதைய அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன அறிவித்தார்.

இப்போதுள்ள பிரச்சினை என்ன?

ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலொன்றை ரத்துச் செய்வதாயின், அதனை இன்னொரு வர்த்தமானி அறிவித்தலின் ஊடாகவே மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகிறது.

ஆனால், சாய்ந்தமருது நகர சபையைப் பிரகடனம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலானது, அதன் பின்னர் இன்னொரு வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ரத்துச் செய்யப்படவில்லை என்கிறார் மனுதாரர் சலீம்.

எனவே, தற்போது சாய்ந்தமருது நகரசபை அமுலில் உள்ளது என்றும், எனவே அதற்கான தேர்தலை நடத்துவதற்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிழக்கு மாகாண ஆளுநருடன் திருகோணமலை வேலையில்லா பட்டதாரி நிர்வாக, ஏற்பாட்டுக் குழுவினர் சந்திப்பு

east tamil

பொலிஸ் அதிகாரியை தாக்கிய சந்தேக நபர்கள் கைது

east tamil

கல்லடி Bridge Market தீக்கிரை

east tamil

பசுமையான திருகோணமலை திட்டத்தின் கீழ் மர நடுகை – ஹரிதரன் தன்வந்த்

east tamil

அனல் மின் நிலையம் அமைக்க பெறப்பட்ட காணிகளை வழங்குங்கள் – சம்பூர் மக்கள் கோரிக்கை

east tamil

Leave a Comment