Pagetamil
இலங்கை

வடக்கு இ.போ.சவிற்கு பெரும்பான்மையின உயரதிகாரி: தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் பதவி வெற்றிடமாகவுள்ள நிலையில்,  வடக்கு நிர்வாகத்தை கவனிக்கும் முகமாக பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த நியமனத்தை தாம் ஏற்கவில்லையென்றும் இ.போ.சவின் சில தொழிற்சங்க பிரிவுகள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

வடபிராந்திய முகாமையாளர் பதவி வெற்றிடமாக உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்கள் வடக்கில் இருக்கும் போதே, அதனை நிரப்பாமல், நிர்வாகத்தை கவனிப்பதற்கென விஜித தர்மசேன என்பவரை நியமிப்பது உள்நோக்கமுடையது என தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

புதிதாக நியமிக்கப்பட்டவர் நாளை தனது கடமைகளை பொறுப்பேற்பார் என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையெடுப்பது தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

வவுனியா விபத்தில் யாழ் இளைஞர் பலி

Pagetamil

முன்னாள் சிப்பாய் குடும்பத்துடன் உண்ணாவிரதம்!

Pagetamil

எரிந்த வண்டியிலிருந்தது கோடீஸ்வர வர்த்தகரின் சடலமா?

Pagetamil

மஹிந்த மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் முயற்சியா?; புதிதுபுதிதாக கதைவிடும் ராஜபக்ச குழு: அரசாங்கம் விளக்கம்!

Pagetamil

ஊடகவியலாளரை கடத்த முயற்சி!

east tamil

Leave a Comment