பதவிய போகஸ்வெவ பகுதியில் உள்ள வீடொன்றிற்கு ஜன்னல் வழியாக நுழைந்து பெண்ணொருவரை வன்புணர்வு செய்த நபர் ஒருவர், அந்த பெண் உதைத்ததால் தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நபர் பாலியல் தூண்டுதல் மருந்தையும் பயன்படுத்தியுள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான 53 வயதான பெண்ணுக்கு, பலாத்காரம் செய்த 58 வயதானவரை தெரியும் என்று பொலிசார் தெரிவித்தனர்.
பலாத்காரத்திற்கு உட்படுத்தியவரை, உதைந்த பெண் நெருக்கமாக அறிந்திருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் இரவில் வீட்டிற்குள் நுழைந்து அச்சுறுத்தி பின்னர் தன்னை பலாத்காரத்திற்குட்படுத்தியதாக அந்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அந்த நபரை தான் எட்டி உதைத்து தள்ளிவிட்டு கீழே விழுந்ததாக அந்த பெண் பொலிசாரிடம் கூறியுள்ளார்.
தனியாக வசிக்கும் பெண் அருகில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறியதையடுத்து பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.