அவுஸ்திரேலியாவில் யுவதியொருவரை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்திய தனுஷ்க குணதிலக மீதான பாலியல் பலாத்கார வழக்கை பெப்ரவரி 23 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து சிட்னி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில், ரி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த 31 வயதான தனுஷ்க குணதிலக, டேட்டிங் செயலியில் சந்தித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நேரில் சந்தித்த அன்று, சிட்னியில் உள்ள ஒரு மதுக்கடையில் இருவரும் மது அருந்தினர். பின்னர் படகில் ஆற்றைக்கடக்கும் போதே, யுவதி எதிர்பாராத பாலியல் சேட்டைகளில் குணதிலக ஈடுபட்டார். பின்னர், கிழக்கு புறநகரில் உள்ள ரோஸ் பே வீட்டிற்குச்சென்று பாலியல் உறவில் ஈடுபட்டனர்.
இதன்போது, குணதிலக மிருகத்தனமாக நடந்து கொண்டுள்ளார். ஆணுறை அணிந்து உறவு கொள்ளுமாறு யுவதி வலியுறுத்திய போது, அதற்கு உடன்பட்ட குணதிலக, இடையில் யுவதிக்கு தெரியாமல் ஆணுறையை அகற்றி விட்டார்.
அதை அறிந்த யுவதி எதிர்ப்பு தெரிவித்த போது, அவரை தாக்கி பலவந்தமாக உறவு கொண்டார்.
தனது ஆணுறுப்பை யுவதியின் வாய்க்குள் திணித்து மூச்சுத்திணறடித்திருந்தார்.
டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்ற நீதிபதி டேவிட் பிரைஸ் இன்று, இந்த வழக்கை பெப்ரவரி 23 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அன்று பொலிசார் சாட்சியங்களை முன்வைப்பர்.
தனுஷ்க குணதிலகவின் சட்டத்தரணி தமக்கு “எந்தவொரு குற்றப்பத்திரமும் வழங்கப்படவில்லை” என்றார்.
தனுஷ்க குணதிலக இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அவரது சட்டத்தரணியே முன்னிலையாகினார். பெப்ரவரியிலும் தனுஷ்க குணதிலக முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தனுஷ்க குணதிலக கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார். இரவில் நடமாட முடியாது. அவர் சமூக ஊடகங்கள் அல்லது டேட்டிங் பயன்பாடுகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.
தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கும் பெண்ணை தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
அவர் தனது பாஸ்போர்ட்டையும் ஒப்படைத்து 200,000 டொலர் பிணை வழங்கினார்.