27.5 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இலங்கை

பர்தா அணிந்து பயணித்த கஞ்சிபானை இம்ரான்: இலங்கையிலிருந்து எப்படி தப்பித்தார்?

இலங்கையின் மிக மோசமான குற்றவாளிகள் பட்டியலில் கஞ்சிபானை இம்ரானுக்கு முதன்மையான இடம் உண்டு. கஞ்சிபானிப்க்கு, சர்வதேச போதைப்பொருள் மாஃபியாக்களுடன் மிக நெருங்கிய தொடர்புள்ளது. மாக்கந்துர மதுஷை மிகப்பெரிய போதைப்பொருள் வியாபாரி ஆக்கியவர் காஞ்சிபானை என சொல்லப்படுகிறது.

மதுஷின் வலையமைப்புடன் கஞ்சிபானை இணைந்த பின்னரே, அந்த வலையமைப்பு உச்சத்திற்கு சென்றது. கஞ்சிப்பானியின் தொடர்புகள் மூலமே, மதுஷின் வலையமைப்பு சர்வதேச மட்டத்திற்கு உயர்ந்தது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், லாவோஸ், வியட்நாம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி, சர்வதேச அளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இலங்கைக்கு ட்ரோலர்கள் மூலம் மிகப்பெருமளவு போதைப்பொருளை அனுப்பினார்கள்.

கஞ்சிப்பாகஞ்சிபானைக்கு சில வர்த்தகர்களிடமிருந்து மட்டுமல்ல  சில அரசியல்வாதிகளிடமிருந்தும் அனுசரணை கிடைத்துள்ளது. மதுஷின் முதலீட்டில் கார் வாடகைக்கு விடும் நிறுவனமொன்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு முஸ்லிம் அரசியல்வாதியொருவரின் தலையீட்டில், நாட்டின் முக்கிய தலைவர் ஒருவர் அழைத்து வரப்பட்டிருந்தார்.

கிறிஸ்மஸ் தினத்தன்று இரவு கஞ்சிபானை இம்ரான் மன்னாரில் இருந்து படகில் ஏறி அரசியல்வாதி ஒருவரின் சகோதரரின் பாதுகாப்பில் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

டிசம்பர் 20ஆம் திகதி, கஞ்சிபானை இம்ரான் அளுத்கடை நீதிமன்றத்தில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தபோது, ​​அவர் விரைவில் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வார் என்று புலனாய்வு அமைப்புகள் மதிப்பிட்டிருந்தன. டிசம்பர் 25ஆம் திகதி கஞ்சிபானை இம்ரான் மீனவராக மாறுவேடமிட்டு படகு மூலம் இரகசியமாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்லப் போகிறார் என்பதை, உளவுத்துறையினர் முன்கூட்டியே அறிந்திருந்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இம்ரான் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டதா அல்லது அவரை கடலில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது இன்றும் தெரியவில்லை. அல்லது, இந்தியாவிற்கு தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டாரா என பல கேள்விகள் உள்ளன.

இதைப் பற்றிய தகவல்களைத் தேடும் போது தெரியும் விஷயம் என்னவென்றால், அவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்கிறார் என்றோ அல்லது அவர் தப்பிச் சென்றுவிட்டார் என்றோ குறைந்தபட்சம் எந்தவொரு புலனாய்வு அமைப்பும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவில்லை.

கஞ்சிபானை இந்தியாவிற்கு தப்பிச் சென்றது பற்றி இந்தியாவிலிருந்து வெளியாகும் இந்து நாளிதழ் செய்தி வெளியிட்ட பின்னரே தகவல் வெளியில் தெரிய வந்தது.

2019 ஆம் ஆண்டு டுபாய் ஹொட்டலில் நடந்த மாக்கந்துர மதுஷின் மகளின் பிறந்தநாள் விழாவில் இலங்கை குற்றவாளிகள் பலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்களில் கஞ்சிபானையும் ஒருவர். அதன் பின்னர், 2022 டிசம்பர் 20ஆம் திகதி விடுதலையாகும் வரை சிறையிலேயே இருந்தார்.

கஞ்சிபானைக்கு கஞ்சா வழக்கில் ஓகஸ்ட் 23, 2019 அன்று தண்டனை விதிக்கப்பட்டது.

05 கிலோ 300 கிராம் கஞ்சாவுடன் மாளிகாவத்தை பொலிஸாரால் 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்ட வழக்கது. ஞ்சா வைத்திருந்தமை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட கஞ்சிபானைக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 03 வருடங்கள் வீதம் 06 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, ஒரே சமயத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த கஞ்சா வழக்கை தவிர, கஞ்சிபானை இம்ரானுக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட பல குற்றங்கள் போலீஸ் புத்தகங்களில் எழுதப்பட்டு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மூன்றாண்டு சிறைத் தண்டனையை முடித்துக் கொண்டதும், கடந்த டிசம்பர் 20ஆம் திகதி, நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளுக்கும் பிணை பெற்று அளுத்கடை நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தார்.

அவருக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடனேயே பிணை வழங்கப்பட்டது. அவர் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது. எனவே, விமான நிலையத்திலோ அல்லது துறைமுகத்திலோ இருந்து சட்டப்பூர்வமாக நாட்டை விட்டு வெளியேற அவருக்கு முற்றிலும் சாத்தியமில்லை.

அதனால்தான் மன்னாரிலிருந்து படகில் ஏறி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் புஸ்ஸா சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு வந்த இம்ரான் பிணை பெற்றதும், நீதிமன்ற கழிவறைக்கு சென்று தோற்றத்தை மாற்றிக் கொண்டு, முகக்கவசம் அணிந்து நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியே சென்றார்.

தோற்றத்தை மாற்றிக் கொண்டு நீதிமன்றத்திற்கு வெளியில் வந்த இம்ரான், லொறி, பேருந்து, முச்சக்கர வண்டி, வான், கார் என வாகனங்களை மாற்றி மாற்றி இருப்பித்திற்கு பயணித்துள்ளார். இந்த பயணத்தின் ஒரு கடத்தில் அவர், முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கஞ்சிபானை இம்ரானை போட்டியாளர்கள், நீதிமன்றத்திற்கு வெளியில் வைத்து சுட்டுக்கொல்லக்கூடும் என்பதாலேயே இப்படி பயணித்துள்ளார்.

அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமையில் இருந்து புறப்பட்ட இம்ரான், பல்வேறு வாகனங்களை மாற்றி, தோற்றங்களையும் மாற்றி 130 முதல் 140 கிலோமீற்றர் தூரம் பயணித்துர், புத்தளத்தை அண்மித்த இடமொன்றிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

அங்கிருந்து மீன் லொறியில், மீனவனாக வேடமிட்டு மன்னார் சென்று, அங்கிருந்து படகு மூலம் இந்தியா சென்றுள்ளார்.

கஞ்சிபானை இம்ரானிற்கும், தெமட்டகொட பாதாள உலககுழுக்களிற்குமிடையில் தீராத பகை உள்ளது. அவர்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் தன்னை குறிவைக்கக்கூடும் என இம்ரான் அஞ்சினார்.

தெமட்டகொட பாதாள உலககுழுக்களிற்கும், கஞ்சிபானை இம்ரான் இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக, இம்ரானின் தந்தை மீது கொலை முயற்சி நடந்தது. அந்த கொலை முயற்சியில் ஈடுபட்ட தெமட்டகொட கும்பலின் 3 பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.

இப்படி இரு தரப்பிற்குமிடையில் கொடூர பகை நீடிக்கிறது.

கஞ்சிபானை இம்ரானும் கோல்ஃபேஸ் போராட்டத்தின் தீவிர ஆதரவாளராக இருந்துள்ளார். போராட்ட களத்திற்கு வராமல், சிறையில் இருந்தபடியே தனது அடியாட்கள் மூலம் போராட்டக்காரர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். கஞ்சிபானையிடம் இருந்து அந்த வசதிகள் கிடைக்கிறது என்பது போராட்டக்காரர்களுக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. கஞ்சிபானை தனது தந்தை மூலம் சில ஆர்வலர்களுக்கு போதைப்பொருள் கொடுத்துள்ளார். ஜனாதிபதி மாளிகைக்குள் ஊடுருவியவர்களில் கஞ்சிபானை இம்ரானின் தந்தையும் ஒருவர்.

இலங்கை பாதாள உலககுழுவினர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு வரும் நேரத்தில், கஞ்சிபானை இம்ரான் பிணையில் விடுவிக்கப்பட்ட உடனேயே இந்தியா சென்றுள்ளார். அவர் இந்தியாவில் தங்கியிருக்க சென்றதாக கருதப்படவில்லை.  இந்தியா வழியாக பாகிஸ்தானுக்குத் தப்பிச் செல்லும் நோக்கத்தில்தான் சென்றதாக கருதப்படுகிறது. அவர் ஏற்கனவே பாகிஸ்தானில் காலடி எடுத்து வைத்துவிட்டதாக உளவு அமைப்புகள் கருதுகின்றன.

இம்ரானுக்கு பாகிஸ்தானின் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் மிக நெருங்கிய உறவுள்ளது. அந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் முதலிடத்தில் இருக்கும் முகமது சித்திக் மூலம் அது ஏற்பட்டது. முகமது சித்திக்கின் டிரைவராக சிறிது காலம் பணியாற்றி போதைப்பொருள் வியாபாரியாக உருவெடுத்தவர் இம்ரான். மொஹமட் சித்திக் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கண்டெய்னர்களில் உருளைக்கிழங்கு, வெங்காயம், மின்சாதனங்களுக்கு மத்தியில் மறைத்து போதைப்பொருளை பெரிய அளவில் கொண்டு வருகிறார்.

சித்திக் போதைப்பொருள் கடத்தலில் முதலிடத்தை பிடித்தவர். சித்திக்கின் போதைப்பொருள் வலையமைப்பு இலங்கை மட்டுமல்லாது மாலைதீவு, சீஷெல்ஸ் போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது. வெலே சுதா, வார்ட் பிளேஸ் சியாம் போன்ற போதைப்பொருள் கடத்தலின் பிரபல நபர்கள் சித்திக்கின் கீழ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சித்திக், தற்போது டுபாயில் உள்ளார். ஏனெனில் அவர் ஆயுள் தண்டனையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

சித்திக்கிற்கு இலங்கையில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும் மனைவி இருக்கிறார். அவர் பாகிஸ்தானின் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரின் மகள். அப்படித்தான் சித்திக் போதைப்பொருள் வர்த்தகத்தில் முக்கிய இணைப்பாக மாறுகிறார். அந்த போதைப்பொருள் வலையமைப்போடு கஞ்சிபானை இம்ரானுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் போதைப்பொருள் வலையமைப்பு செயல்பட்டு வருகிறது. கஞ்சிபானை அவர்களுடன் மிக நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கஞ்சிபானை பாகிஸ்தானிற்கு சென்றால், விரைவில் டுபாயில் தோன்றக்கூடும். அவரது தொழில் நடவடிக்கைகள் அனைத்தும் டுபாயில்தான் உள்ளது. மாக்கந்துரே மதுஷுடன் இணைந்து பல நூறு கோடி ரூபாய் முதலிட்டுள்ளதாக கூறப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் மூலம் அவர் சம்பாதித்த கோடிக்கணக்கான பணம் டுபாய் வங்கியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மதுஷின் டுபாயில் உள்ள நட்சத்திர ஹொட்டல் உள்ளிட்ட பல ரகசியங்கள் குறித்தும் கஞ்சிபானை இம்ரானுக்கு மட்டுமே தெரியும்.

மதுஷ் கொலையுடன் பல விடயங்கள் புதைந்துவிட்டது என பலரும் நினைத்தார்கள் ஆனால் நாளை கஞ்சிபானை இம்ரான் அந்த வளங்களை எல்லாம் பெற்று அங்கிருந்து கொழும்பு பாதாள உலக சக்தியை மட்டுமல்ல போதைப்பொருள் விநியோக வலையமைப்பையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.

கஞ்சிபானை இம்ரான் எப்படி பாதாள உலக குற்றவாளியானார்?

கஞ்சிபானை என்ற பெயர் இம்ரானுடன் எப்படி ஒட்டியது என்ற கேள்வி பலரிடம் உள்ளது. பெற்றோர் அவருக்கு முகமது நஜீம் முகமது இம்ரான் என்று பெயரிட்டனர். இம்ரானின் தந்தை மாளிகாவத்தையில் கஞ்சி விற்பவர். கஞ்சியை தள்ளுவண்டியில் கொண்டு சென்று விற்பனையில் ஈடுபட்டிருந்த அவருக்கு உதவியாக இம்ரானும் சென்றார். அதனால் நண்பர்கள் அவருக்கு கஞ்சிபானை இம்ரான் என்று பெயர் வைத்துள்ளனர்.

கஞ்சிபானை இம்ரான் உயர்வகுப்பு வரை படித்தவர் என்று கூறப்படுகிறது. மாளிகாவத்தை பொதுச் சந்தை வளாகத்தில் உள்ள கோழிக்கடை ஒன்றில் காசாளராகப் பணிபுரிந்ததே இவரது முதல் வேலையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. படிப்பை முடித்துவிட்டு மூன்று ஆண்டுகள் அங்கேயே பணிபுரிந்தார். பின்னர் மாளிகாவத்தை சந்தியில் சொந்தமாக கோழிக்கடை ஒன்றை அமைத்துள்ளார்.

அப்போதுதான், பாதாளஉலகக்குழு உறுப்பினர் மஞ்சள் அக்ரமை சந்திக்கிறார்.  கஞ்சிபானையின் இறைச்சிக் கடைக்கு அடிக்கடி வந்து செல்லும் மஞ்சள் அக்ரம் ஒரு நாள், இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட சிகரெட் மூட்டையை இம்ரானிடம் கொடுத்து, கவனமாக வைத்திருக்கச் சொன்னார். யாரோ தகவல் கொடுத்து, அடுத்த சில மணித்தியாலங்களிலேயெ சிகரெட்டுக்களும் கஞ்சிபானையை பொலிசார் கைது செய்தனர்.

கஞ்சிபானை இம்ரானின் தலைவிதி  மாறத் தொடங்கிய சம்பவம் அது.

பின்னர், மஞ்சள் அக்ரமுடன் இணைந்து கஞ்சாவிற்கு அடிமையானார்.

பாதாள உலகத்திற்கெதிரான பொலிஸ் நடவடிக்கைகள் தீவிரமடைய, பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரை காப்பாற்ற மஞ்சள் அக்ரம்  நுவரெலியாவுக்கு தப்பிச் சென்றார். அவர் நுவரெலியாவில் நீண்டகாலம் ஒளிந்து கொள்ள முடியவில்லை. ஆயுதக்குழுவால் கடத்தப்பட்ட பின்னர் அவர் காணாமல் போனார்.

கஞ்சிப்பானை இம்ரான், மாளிகாவத்தையை சேர்ந்த நினோசா என்ற பெண்ணை சந்தித்து, அவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர், மஞ்சள் அக்ரமின் மனைவி பாத்திமா, இரண்டு பிள்ளைகளை கவனிக்கும் பொறுப்பையும் கஞ்சிபானை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, கஞ்சிபானைக்கு திருமணமானது. அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கஞ்சிபானை- மஞ்சள் அக்ரமின் மனைவி ஜோடிக்கும் ஒரு குழந்தை உள்ளது.

மஞ்சள் அக்ரமின் மனைவி நல்ல அழகி. அதனால் மற்றொரு பாதாள உலககுழு உறுப்பினர் அவரில் கண் வைத்துள்ளார். அவர் கஞ்சிபானையை கொல்ல இரண்டு முறை முயற்சித்தார். கஞ்சிப்பானை எப்படியோ தப்பித்தார்.

அந்த நபரிடமிருந்து தப்பிக்கவும், பாதுகாப்பு படையினரின் வேட்டையிலிருந்து தப்பிக்க கஞ்சிபானை மார்ச் 28, 2015 அன்று டுபாய் சென்றார்.

மனைவி கொலை

கஞ்சிபானை டுபாய்க்கு தப்பிச் சென்ற பிறகு, அவரது மனைவி நினோசா, பிள்ளைகளுடன் மாளிகாவத்தையில் தங்கியிருந்தார். கணவர் இல்லாத நிலையில், வேறு சில பாதாள உலககுழு உறுப்பினர்களுடன் அவர் பழகுவதாக கஞ்சிப்பானை சந்தேகப்பட்டார்.

கஞ்சிபானை நினோசாவை போனில் அழைத்து அடிக்கடி மிரட்ட ஆரம்பித்தார்.  ஆனால் நினோசா காஞ்சிபாயின் மிரட்டல்களை கண்டுகொள்ளவில்லை. தான் விரும்பியபடி வாழ ஆரம்பித்தார்.

அப்போது கஞ்சிபானை, மஞ்சள் அக்ரமின் மனைவி பாத்திமாவுடன் பழகினார். கஞ்சிபானை தனது பிள்ளைகளை டுபாய்க்கு  அழைத்து வர விரும்பினார். அதற்கான திட்டத்தை வகுத்தார்.

பாத்திமாவின் உதவியுடன், கஞ்சிபானை தனது பிள்ளைகளை டுபாய்க்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்தார். நினோசாவை விவாகரத்து செய்துவிட்டு, பாத்திமாவுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்பினார். ஆனால் நினோசா விவாகரத்து வழங்க மறுத்துவிட்டார்.

அப்போது நினோசாவுக்கு காஞ்சிபானை மீது கடும் வெறுப்பு ஏற்பட்டது. இதேவேளை, நினோசா தன்னை உளவு பார்க்கிறார் என்ற சந்தேகம் கஞ்சிபானைக்கு ஏற்பட்டது. இதையடுத்து, இலங்கையில் உள்ள தனது பாதாள உலகக் கூட்டாளிகள் மூலம், நினோசாவை கொல்ல திட்டமிட்டார்.

வாசிம் கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர்.

மாளிகாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட இவர் சிறுவயது முதலே கஞ்சிபானையுடன் தொடர்பு கொண்டிருந்தார். நினோசாவைக் கொல்வதில் வாசிமின் உதவியைப் பெற காஞ்சிபானை முடிவு செய்தார். அதற்கு காஞ்சிபானை வாசிமிற்கு பணம் கொடுத்தார்.  நினோசாவின் பயணங்கள் மட்டுமின்றி அவரது திருமணத்திற்கு புறம்பான தொடர்புகள் பற்றிய அனைத்து விவரங்களையும் காஞ்சிபானையிடம் வாசிம் தெரிவித்தார்.

ஓகஸ்ட் 26, 2018 இரவு, நினோசாவைக் கொல்ல காஞ்சிபானை திட்டமிட்டார். நினோசா மாளிகாவத்தை தனது சட்டப்பூர்வ கணவர் தம்மை கொல்ல திட்டமிட்டுள்ளார் என்பதை அறியாமல் வீட்டிலேயே இருந்தார்.

மாளிகாவத்தை ஜும்மா மஜ்ஜித் வீதியிலுள்ள நினோசாவின் வீட்டிற்கு அருகில் காஞ்சிபானை அனுப்பிய இரண்டு கொலையாளிகள் தங்கியிருந்தனர். கஞ்சிபானையிடம் இருந்து உத்தரவு கிடைத்ததும், இருவரும் வீட்டிற்குள் புகுந்து, நினோசாவை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இதன் பின்னர், மஞ்சள் அக்ரமின் மனைவி மற்றும் 5 பிள்ளைகளையும் அவர் டுபாய்க்கு அழைத்து, அங்கு நல்ல கல்வி வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

டுபாயில் இருந்தபடி அடியாட்கள் மூலம் இலங்கையில் அவர் 3 கொலைகள் செய்ததாக பதிவாகியுள்ளது. இதில் சட்டபூர்வ மனைவி கொலையும் அடங்கும். 15க்கும் மேற்பட்ட கொலை முயற்சிகள். பதிவாகியுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரித்தானியர் ஒருவரால் வந்த வினை: இலங்கையில் பேராபத்தாக உருவெடுத்துள்ள ஆபிரிக்க நத்தைகள்!

Pagetamil

2025 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களின் விபரம்!

Pagetamil

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படையின் மருத்துவ கப்பல்

east tamil

தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிப்பா?: வல்வெட்டித்துறை மக்கள் போராட்டம்!

Pagetamil

மாவீரர்நாளில் அரசியல் செய்யும் சிறிதரன் குழுவின் நடவடிக்கைக்கு முன்னாள் போராளிகள் எதிர்ப்பு

Pagetamil

Leave a Comment