நேற்றிரவு (07) 11 மணியளவில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலங்காடு பகுதி வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத 04 பேர், ஒருவர் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.
வாள்களால் வெட்டப்பட்டு காயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச் சம்பவத்தில் ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த குலசிங்கம் சூரியகுமார் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
வாள்வெட்டினை மேற்கொண்டவர்கள் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1